பக்கம் எண் :

514பால காண்டம்  

திலக வாள் நுதல் பிடிகளும்.
   குருளையும். செறிந்த
உலவை நீள் வனத்து. ஊதமே
   ஒத்த; அவ் ஊதத்
தலைவனே ஒத்துப் பொலிந்தது.
   சந்திரசயிலம்.
 

அலகு  இல் யானைகள்- (உருவம் வலிமைகளை) அளவிடமுடியாத
ஆண்  யானைகள்;  அநேகமும் -  பலவும்; அவற்றொடு மிடைந்த -
அவ்  யானைகளோடு  நெருங்கியுள்ள; திலகம் வாள் நுதல் - சிந்துரத்
திலகம்   தீட்டிய    ஒளியுள்ள   நெற்றியையுடைய;   பிடிகளும்   -
பெண்யானைகளும்;  குருளையும்  -  யானைக் குட்டிகளும்; செறிந்த-
நெருங்கியிருந்தவை;  உலவை  நீள்  வனத்து - மரங்கள் மிகுந்துள்ள
நீண்ட   வனத்திலே;  ஊதமே  ஒத்த  -  வாழும்  காட்டு  யானைக்
கூட்டத்தை   ஒத்திருந்தன;   சந்திர   சயிலம்   -  அந்தச்  சந்திர
சயிலமானது;   அவ் ஊதத் தலைவனே - அந்த யானைக் கூட்டத்தின்
தலைவனை; ஒத்துப் பொலிந்தது - ஒத்து விளங்கியது.

சேனையிலுள்ள     யானைகள்  சந்திரசயிலத்து  அருகில்  இருந்த
தோற்றம்.  காட்டு யானைக்  கூட்டமும்.  யானைக் கூட்டத் தலைவனும்
போன்று   இருந்தது   என்றார்.  யானைகள்  யாவும் பெரிய மலையை
அடுத்த சிறுசிறு குன்றும் போலிருந்தன என்பது.                  7
 

                           கருங்கல்லைப் பொன்னாக்கிய தேர்கள்
 

820.

‘தெருண்ட மேலவர் சிறியவர்ச்
   சேரினும். அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்’
   எனும் இது வழக்கே;
உருண்ட வாய்தொறும். பொன் உருள்
   உரைத்து உரைத்து ஓடி.
இருண்ட கல்லையும் தன் நிறம்
   ஆக்கிய - இரதம்.

 

தெருண்ட  மேலவர் - தெளிந்த அறிவுடைய பெரியோர்; சிறியவர்
சேரினும்
-  சிறியவர்களை (தாம் போய்ச்) சேர்ந்திருந்தாலும்; மருண்ட
அவர்தம்  
-  அறிவுத்   தெளிவில்லாமல்  மயங்கிய  அவர்களுடைய;
புன்மையை  
- இழி குணத்தை; மாற்றுவர் எனும் - போக்குவர் என்று
சொல்லுகின்ற;  இது  -  இந்த வார்த்தை; வழக்கே - முறைமையானதே
(உலக  இயல்பு);  இரதம்  -  (ஏனெனில்)  இரதங்கள்; பொன் உருள்
உருண்ட
- பொன்னால் இயன்ற சக்கரங்கள் உருண்டு