(பொழில் புகுந்த அப் பெண்கள்) வழி வருந்தினர் ஆய் - வழி நடந்த சோர்வால் வருந்தினராய்; வளம்கொள் மாலை வண்டு - செழுமையாக வளர்ந்த வண்டுகள்; தளம் கொள் தாமரையென - இதழுள்ள தாமரை மலரெனக் கருதி; தளிர் அடியினும் - தளிரையொத்த தம் பாதங்களிலும்; முகத்தும் - முகத்திலும்; அலமர - சுழன்று கொண்டிருக்க; விளங்கு தம் உரு - ஒளிவிடுகின்ற தமது வடிவம்; தோழியர் அயிர்த்திட - (தம் தோழியர்) ஐயப்படும்படி; பளிங்கிடை - பளிங்குப் பாறையில்; வெளிப்பட - வெளிப்படுவதால்; வேறோர் துளங்கு பாறையில் - விளங்கும் வேறொரு பளிங்குப் பாறையிலே; துயின்றார் - படுத்து உறங்கினார்கள். மங்கையர் வெகுதூரம் பயணம் வந்த களைப்பால் ஒரு பளிங்குப் பாறையில் படுத்துறங்கினர். அப்போது அவர்களின் பாதங்களையும் முகத்தையும் கண்டு |