பக்கம் எண் :

  சந்திர சயிலப் படலம்519

மகளிரும்;  வடிக்கும்  அயில்  வீரரும் -  வடித்துக்  கூர்மையாக்கிய
வேல்  வீரரும்; மயங்கினர் திரிந்தார் - மயங்கிய வண்ணம் திரிந்தனர்
(தாம்  போகும் இடம்  இன்னதென்று தெரியாததால்); இடிக்கும் முரசக்
குரலின  
- (பின்பு)  முழங்குகின்ற மங்கள முரசின் ஒலியாலும்; ஏங்கும்
முரல் சங்கின்
- எங்கும் ஒலியெழும் சங்கநாதங்களாலும்; கொடிகளின்
- கொடிகளாலும்; உணர்ந்து -  (அரசனது மாளிகை இதுவென) தெரிந்து
கொண்டு;  அரசர்  கோநகர்   அடைந்தார்   -   அரசன்  தங்கிய
மாளிகையை அடைந்தார்கள்.

பட    மாடங்கள்  பலவும் ஒரே தன்மையில் அமைந்திருந்தமையால்
வேற்றுமை  தெரியாமல்  மயங்கி.  முரசு.  சங்கு.  கொடிகளால் அரசன்
தங்கிய  மாடம் இதுவென்று அறிந்தனர்  என்பது  ஒவ்வொரு  மாடமும்
அரச மாளிகை போல இருந்தது.                               15
 

828.

மிதிக்க நிமிர் தூளியின்
   விளக்கம் அறு மெய்யை.
சுதைக் கண் நுரையைப் பொருவு
   தூசு கொடு. தூய்தா
உதித்தனர். இளங் குமரர்;
   ஓவியரின் ஓவம்
புதுக்கினர் என. தருண
   மங்கையர் பொலிந்தார்.
 

மிதிக்க நிமிர் - யானை முதலானவை மிதித்துச் செல்வதால் மேலே
எழுந்த;  தூளியின்  -  புழுதியால்;  விளக்கம்  அறு  மெய்யை  -
ஒளியில்லாது  அழகு  மழுங்கிய மனைவியரின் மேனியை; இளங்குமரர்
-  அம்  மங்கையரின்  இளமையான   கணவர்;  சுதைக்  கண் நுரை
பொருவு  
-  பாலின்  நுரையை  ஒத்த; தூசு  கொடு  - ஆடையைக்
கொண்டு;  தூய்தா  - (படிந்த தூசு  நீங்கும்படி) தூயதாகப் (புழுதியை);
உதிர்த்தனர்  
-  போக்கினார்கள்; (அதனால்)  தருண  மங்கையர் -
இளமையுடைய  அம்  மங்கையர்;   ஓவியர்  இன்  ஓவம்  - ஓவியர்
அழகிய   ஓவியத்தை  (மாசுநீங்க);  புதுக்கினர்  என  - புதுப்பித்தார்
என்னும்படி; பொலிந்தார் - விளங்கினார்கள்.

கணவர்     தம்  மனைவியர்  மீது  படிந்திருந்த புழுதியைத் தனது
ஆடையால்   போக்க.   அதனால்    அம்    மகளிர்   ஓவியர்களால்
புதுப்பிக்கப்பட்ட ஓவியம் போல விளங்கினர் என்பது.              16

                                        படமாடங்களில் வதிதல்
 

829.

தாள் உயர் தடக் கிரி இழிந்து தரை சேரும்
கோள் அரி என. கரிகள் கொற்றவர் இழிந்தார்;