பக்கம் எண் :

524பால காண்டம்  

மன்றல் மணம் நாறு படமாடம் நுழைகின்றார்.
குன்றின் முழைதோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார்.

 

துன்றி  நெறி - நெருங்கிப் பொதிந்த; பங்கிகள் - தலை மயிர்கள்;
துளங்க   
-   காற்றால்   அசைய;  அழலோடும்  மின்  -  தீயோடு
மின்னல்கள்;  திரிவ  என்ன  -  திரிவன  என்று சொல்லும்படி; மணி
ஆரம்  மிளிர் 
-  இரத்தின  மாலைகள்  விளங்குகின்ற;  மார்பர்  -
மார்பையுடைய   வீரர்கள்;   மன்றல்  மணம்  நாறும்  -  புதுமணம்
வீசுகின்ற;  பட  மாடம்  -  (தத்தம்) கூடாரங்களில்; நுழைகின்றார் -
புகுகின்றவராய்;  குன்றில் - மலையிலே (உள்ள); முழைதோறும் நுழை
-  குகைகளிலே  புகுகின்ற;  கோள்  அரிகள்  -  கொலைத் தொழில்
அமைந்த சிங்கங்களை; ஒத்தார் - ஒத்தார்கள்.

பட     மாடங்களில்  புகும்  வீரர்க்குக்  குகையுள்  புகும்  சிங்கம்
உவமையாயிற்று.   பங்கி:    ஆண்களின்   தலைமயிர்.  வீரர்  நடந்து
செல்லுகையில்    அவர்கள்    மார்புகளில்    இரத்தின    மாலைகள்
விளங்குவதை நெருப்பும் மின்னலும் திரிவன போலும் என்றார்.      24

                                     நீரைக் கலக்கும் யானைகள்
 

837.

நெருங்கு அயில் எயிற்றனைய
   செம் மயிரின் நெற்றிப்
பொருங் குலிகம் அப்பியன.
   போர் மணிகள் ஆர்ப்ப.-
பெருங் களிறு - அலைப் புனல்
   கலக்குவன; பெட்கும்
கருங் கடல் கலக்கும் மது
   கயிடவரை ஒத்த.
 

நெருங்கு  எயிறு  அயில் அனைய - நெருங்கிய தந்தங்கள் வேல்
போல்  கூர்மையுடையன;  செம்மயிரின்  நெற்றி  - செம்மயிர் உள்ள
நெற்றியில்;   பொருங்   குவிகம்   -   (தனக்குத்  தானே  நிகரான)
சாதிலிங்கம்;  அப்பியன  -  அப்பியுள்ள;  பெருங்களிறு  -  பெரிய
யானைகள்;  போர் மணிகள் ஆர்ப்ப - (ஒன்றோடு ஒன்று) மாறுபட்டு
மணிகள்   ஒலிக்க;  அலைபுனல்  கலக்குவன  -  அலைகளையுடைய
பொய்கை    நீரைக்    கலக்குபவை;    பெட்கும்   -   (யாவராலும்)
விரும்பப்படும்; கருங்கடல்- கரிய கடலை; கலக்கும் மது கைடவரை -
கலக்கிய மதுகைடப அசுரர்களை; ஒத்த - ஒத்தன.

பொருங்  குலிகம்   -  பொருதல்  -  பொருந்துதல்.  ‘பொய்பொரு
முடங்குகை’ - (சிலப் 15-50).