துகில் இடை மடந்தையரொடு - ஆடையணிந்த இடையையுடைய மகிளரோடு;ஆடவர் துவன்றி - ஆண்கள் நெருங்கி; பகல் இடைய - கதிரவன் ஒளியும் மழுங்கும்படி; அட்டலில் மடுத்த - மடைப்பள்ளியிலிருந்து கொண்டு வந்த; எரி - நெருப்பிலே; பரப்பும் அகில் - பரப்பிய அகிற் கட்டைகளில்; இடு கொழும்புகை - உண்டாகிய மிகுதியான புகை; அழுங்கலின் - நெருங்குவதால்; முழங்கா - இடி இடிக்காத; முகில் - மேகங்கள்; படு நெடுங்கடலை - தங்கிய பெரிய கடலை; அம் மூதூர் - (அவர்கள் தங்கிய) பழைய நகர்; ஒத்துளது - ஒத்துள்ளது. அகில்புகை மிகுதியாகத் தங்கிய அந்த இடத்திற்கு முகில்படுதல் உவமையாயிற்று. அந்த இடத்தின் பரப்பும். அங்குள்ளவர் எழுப்பிய அகிற் புகையின் மிகுதியும் வருணனையில் புலப்படும். 27 சேனை மிகுதியின் பொலிவு அறுசீர் விருத்தம் |