பக்கம் எண் :

  சந்திர சயிலப் படலம்527

குமரரும் மங்கைமாரும்
   குழுமலால். வழுவி விண்நின்று
அமரர் நாடு இழிந்தது என்னப்
   பொலிந்தது. அவ் அனீக வெள்ளம்.

 

காண     வந்தார்  -   (அச்  சேனை   வெள்ளத்தைக்   காண
வந்தவர்களான);  கமர்  உறு பொருப்பின்  வாழும்  - பிளவுகளைக்
கொண்ட  மலைகளிலே வாழுகின்ற;  விஞ்சையர் - வித்தியாதரர்களும்;
தமரையும்  அறியார் நின்று
- தம் இனத்தவரை வேறுபாடு அறியாமல்;
திகைப்பு  உறும்
-  திகைப்பதற்குக்  காரணமான; தகைமை சான்ற -
அழகு   மிக்க;  குமரரும்  மங்கைமாரும்  -  ஆடவரும்  மகளிரும்;
குழுமலால்  
-  கூடியிருத்ததலால்;  அவ் அனீக வெள்ளம் - அந்தச்
சேனையின்  பெருக்கு; அமரர்  நாடு விண் நின்று - தெய்வ லோகம்
விண்ணிலிருந்து;  வழுவி  இழிந்தது  என்ன  -  நழுவி  விழுந்ததோ
என்னும்படி; பொலிந்தது - விளங்கியது.

பேரழகு   படைத்த சேனை மாந்தரைக் கண்டு தேவர்களும் வியந்து
மயங்கி நின்றனர்  என்பது.  பேரழகு உள்ளவர் என்று  பெயர் படைத்த
வித்தியாதரரும்  திகைத்துப்  பார்க்குமாறு  அழகு   வாய்ந்த மைந்தரும்
மகளிரும்  கூடிய  அச்  சேனை   வெள்ளம்   திரண்ட  அந்த  இடம்
தேவலோகமே   இங்கே    வந்து   தங்கியதோ  என்று  ஐயப்படும்படி
இருந்தது என்பது.                                          28

                             மகளிரும் மைந்தரும் திரியும் காட்சி
 

841.

வெயில் நிறம் குறையச் சோதி
   மின் நிழல் பரப்ப. முன்னம்
துயில் உணர் செவ்வியோரும்.
   துனி உறு முனிவினோரும்.
குயிலொடும் இனிது பேசி.
   சிலம்பொடும் இனிது கூவி.
மயிலினம் திரிவ என்ன.
   திரிந்தனர் - மகளிர் எல்லாம்.
 

முன்னம்   துயில்   உணர் -  (விழித்தெழும்  நேரத்திற்கு) சிறிது
முன்பே  உறக்கம்  நீங்கிய;  செவ்வியோரும்  - அழகு உடையவரும்;
துனி   உறு  முனிவினோரும்   
-   நீண்ட   ஊடலால்   அமைந்த
கோபத்தையுடையவருமான;  மகளிர்  எல்லாம் - மங்கையர் யாவரும்;
குயிலொடும்  இனிது  பேசி  
- குயில்களோடு இனிமையாகப் பேசியும்;
சிலம்பொடும்  இனிது கூவி
- மலை எதிரொலிக்க நன்றாகக் கூவியும்;
வெயில்  நிறம்  குறைய  
- கதிரவன் ஒளி?யும் தமக்கு முன்னே ஒளி
மழுங்குமாறு;  சோதி  -  அணிகலன்களின் ஒளி; மின்நிழல் பரப்ப -
மின்னலைப் போன்ற