15. வரைக் காட்சிப் படலம் படலத்தின் பெயர் அமைதி: தசரதனுடன் சென்ற சேனைகள் சந்திர சைலம் என்னும் மலையைக் கண்டது பற்றிக் கூறும் பகுதியாதலால் இப் பெயர் அமைந்துள்ளது. படலச் சுருக்கம்: மாண்புமிக்க சந்திரசயிலத்தின் தோற்றத்தையும் நிகழ்ச்சிகளையும் மாந்தர் காணுகின்றார்கள். சிறந்த மலைக் காட்சிகளைக் கண்டு வியக்கின்றார்கள். அம்மலைமேல் இனிதாக விளையாடுகின்றார்கள். அந்திக் காலத்தில் மலையினது காட்சியைக் கண்டு மகிழ்கின்றார்கள். இருளிலே தீப ஒளி எங்கும் விளங்குகின்றது. அப்பொழுது வானில் மதி தோன்றியதால் மகளிர் மகிழ்ச்சியடைகின்றார்கள். கூத்தர் ஆடுகின்றார்கள். மலையில் பலவகை ஓசைகள் எழுகின்றன. மாந்தர் இரவை ஒருவாறு கழிக்கின்றனர். சந்திரசயிலத்தின் தோற்றமும் மாண்பும் |