பக்கம் எண் :

534பால காண்டம்  

850.

அஞ்சனக் கிரியின் அன்ன
   அழி கவுள் யானை கொன்ற
வெஞ் சினத்து அரியின் திண் கால்
   சுவட்டொடு. - விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும். நீலக்
   குல மணித் தலத்தும். - மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த
   பசுஞ் சுவடு உடைத்து மன்னோ!
 

(அம்     மலை) குல நீல மணித் தலத்தும் - சிறந்த இந்திர நீலக்
கற்களால்   அமைந்த   அம்மலை  (முறையே);  அஞ்சனக்  கிரியின்
அன்ன  
-  கரிய  மலையை  ஒத்த;  அழி  கவுள்  யானை - மதநீர்
ஒழுகும்  கன்னம் உடையதுமான யானைகளை; கொன்ற வெஞ்சினத்து
அரியின்  
-  கொன்ற  கடுங்கோபமுடைய  சிங்கத்தினது;  திண் கால்
சுவட்டொடு  
-  சிங்கத்தினது  வலிய கால்கள் பட்ட அடித்தடங்களும்;
விஞ்சை  வேந்தர் குஞ்சி அம் தலத்தும்
- வித்தியாதர அரசர்களின்
அழகிய  மயிர்முடியுள்ள  தலையிலும்;  மாதர்  பஞ்சி அம் கமலம் -
(அவர்)  மனைவியரின்  செம்பஞ்சு  ஊட்டிய  அடித் தாமரைகள்; பூத்த
பசுஞ் சுவடு
- படுதலால் உண்டாகிய ஈரமான சுவடுகளும்; உடைத்து -
உடையதாக இருந்தது.

அம்   மலையின் இடங்களில் யானையோடு போர்செய்து அவற்றைக்
கொன்ற   சிங்கங்களின்    அடிச்சுவடுகள்   பட்டுள்ளன  (ஒரு  புறம்)
ஊடலில்   பணிந்த    தலைவரின்    முடியுள்ள   தலைகளில்  அவர்
மனைவியரின்  காற்சுவடுகள்  பட்டன  (இன்னொரு   புறம்);  இவ்வாறு
அம்  மலையில்  அச்சக்  குறிகளும்   இன்பக்   குறிகளும்   ஒருங்கே
காணப்பெற்றன.                                             8
   

851.

செங் கயல் அனைய நாட்டம்
   செவி உறா. முறுவல் தோன்றா.
பொங்கு இருங் கூந்தல் சோரா.
   புருவங்கள் நெரியா. பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி.
   நரம்பு அளைந்து. அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டு.
   கின்னரம் மயங்கும் மாதோ!

 

மங்கையர் -  மகளிர்;  செங்கயல்  அனைய நாட்டம் - அழகிய
கயல் மீன்களையொத்த கண்கள்; செவி   உறா  -  காதுவரை  சென்று
மீளாதவாறும்;  முறுவல்   தோன்றா   -  பற்களில்  ஒளி  வெளியே
தோன்றாவாறும்; பொங்கு இருங்  கூந்தல்  சோரா  - மிகத் திரண்ட
மயிர்