முடிப்புக் குலைந்து விழாதபடியும்; புருவங்கள் நெரியா - புருவங்கள் வளைந்து தோன்றாதபடியும்; பூவின் அங்கையும் மிடறும் கூட்டி - தாமரை போனற தம் உள்ளங்கையையும் குரலையும் ஒருவழிப்படுத்தி; நரம்பு அளைந்து - நரம்பைத் துழாவி (அதனால் உண்டாக்கும்); அமுதம் ஊறும் - அமுதம் போல் இனிமை தோற்றும்; பாடல் கேட்டு - இன்னிசையைக் கேட்டு; கின்னரம் மயங்கும் - கின்னரப் பறவைகளும் திகைத்து நிற்கும். ‘அங்கையும் மிடறும் கூட்டி நரம்பளைந்து’ என்றது. மிடற்றுக் குரலுக்கு ஏற்பக் கைத்தொழில் புரிந்து நரம்பில் இன்னோசை உண்டாக்கி என்றபடி. கின்னரம்: இசையின் குற்றங்களையும் குணங்களையும் அறியவல்லதாய் எப்பொழுதும் ஆணும் பெண்ணுமாக இருக்கும் ஒருவகைப் பறவை இசையில் வல்ல தேவசாதி என்றும் பொருள் கூறுவர். 9 |