பக்கம் எண் :

544பால காண்டம்  

சின்னங்கள் முலையின் அப்பி.
   தே மலர் கொய்கின்றாரும்;
வன்னங்கள் பலவும் தோன்ற
   மணிஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன.
   அகன் சுனை குடைகின்றாரும்.
 

பிண்டி   அம்  தளிர் - அசோகின் அழகிய தளிர்களை; உகிரில்
பின்னங்கள்  செய்து  
-  (தம்)  நகங்களால்  சிறு சிறு துண்டுகளாகக்
கிள்ளி;   கைக் கொண்ட   சின்னங்கள்  -  கைக்  கொண்ட  அத்
துண்டுகளை;  முலையின்  அப்பி  -  தம்  தனங்களிலே அழகுபடப்
பொருத்தி;தேன்மலர்  -  தேனுடைய மலர்களை; கொய்கின்றாரும் -
பறிப்பவரும்;  வன்னங்கள்   பலவும் - பலவகையான வண்ணங்களும்;
தோன்ற  
-  தோன்றும்படி;  மணி  ஒளிர்  மலையின் - நவமணிகள்
விளங்கும்  மலையிலே;  நில்லா  அன்னங்கள்  -  நிலையாக இருந்த
வாழாத  அன்னங்கள்;   புகுந்த என்ன - (இப்போது) புகுந்தன என்று
(கண்டோர்)  கருதும்படி;   அகல்சுனை  -  பரவியுள்ள  சுனைகளிலே;
குடைகின்றாரும்  
-  (அச்   சேனையில்  உள்ள  மாதர்கள்)  மூழ்கிக்
குளிப்பவராயினர்.

தளிர்     முறிகளைத்  தம்  தனங்களில் அப்பி அலங்காரம் செய்து
கொள்வது  மகளிர்  இயல்பாம்.  மாதர்கள்  மலர் கொய்தலையும். சுனை
குடைதலையும்   செய்தனர்   என்பது.   அன்னப்  பறவை  மருதநிலக்
கருப்பொருளாதலால் ‘மலையின் நில்லா’ என்றார்.                 24

                                       சிறந்த மலைக் காட்சிகள்

கலிவிருத்தம்
 

867.

ஈனும் மாழை இளந் தளிர் ஏய் ஒளி
ஈனும். மாழை இளந் தளிரே - இடை.
மானும். வேழமும். நாகமும். மாதர் தோள்
மானும் வேழமும். நாகமும் - மாடு எலாம்.
 

இடை     ஈனும் -  (அம் மலையின்) நடுப்பாகத்தில் தளிர்க்கின்ற;
மாழை  இளந்தளிர் ஏய்
- மாமரத்தின் இளைய தளிரையொத்த; ஒளி
ஈனும்  மாழை  
-  ஒளியைத்  தரும்  பொன்னின்;  இளந் தளிரே -
மெல்லிய   தகடுகளாகும்;   மாடு   எலாம்   -   அந்த   மலையின்
பக்கங்களிலெல்லாம்; மானும் வேழமும் - மானும் யானையும்; நாகமும்
-  பாம்பும்;  மாதர் தோள்  மானும்  -  மகளிரின்  தோளையொத்த
தன்மையைக்   கொண்ட;   வேழமும்   நாகமும்   -  மூங்கில்களும்
சுரபுன்னை மரங்களும் (உள்ளன).

யமகம்  என்னும்  மடக்கணி. மாழை: மாமரம். பொன். நாகம்: பாம்பு.
சுரபுன்னை.                                                25