பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்547

மா     கடம் மா - பெரிய காட்டிலுள்ள மாமரங்கள்; ஊறு உற -
சேதம்   அடையும்படி;   ஊங்கு  எலாம்  -  அம்  மலையிடங்களில்
எல்லாம்;  ஊறுமா  -  மேன்மேல்  சுரக்கும்படி;  கடம்  மா மதம் -
யானைகளின்  மதநீர்;   ஓடும்  -  பெருகி ஓடும் (அந்தப் பெருக்கால்);
ஆறு  சேர்  வனம்  
-  வழிகளில்  திரண்ட காட்டிலுள்ள; ஆ வரை
ஆடும்   
-   ஆச்சா   மரமும்    மூங்கில்களும்   (வேர்   அறுந்து)
அசைந்தாடும்;  யாறு  சேர்வன  - அந்த  மலையாறுகளில் நீருண்ணச்
செல்பவை;   வரை   யாடும்   மா   -   மலையாடுகளும்  மற்றைய
மிருகங்களுமாம்.

காட்டு     மரங்கள் சேதம்  அடையும்படி யானை மதநீர் பாய்ந்தது.
அம்  மதத்தால் ஆச்சா முதலிய  மரங்கள்  வேர் பறிந்து ஒரு புறத்தில்
வீழ்கின்றன.   மற்றொருபுறம்    நீர்   உண்ணும்படி   மலையாறுகளில்
வரையாடு  முதலிய  காட்டு   விலங்குகள்   செல்லுகின்றன  என்பது -
தொடர்பு உயர்வு நவிற்சியணி.                                30
 

873.

கல் இயங்கு கருங் குற மங்கையர்.
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா.
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம்.
வல் இயங்கள் நெருங்கி மயங்குமே.

 

கல் இயங்கு - மலையில் வாழுகின்ற; கருங் குற மங்கையர்- கரிய
குறத்தியர்; அங்குக்  கல்லி அகழ் - அம் மலையில் தோண்டி; காமர்
கிழங்கு  எடா  
- அழகான கிழங்குகளை எடுப்பதற்காக; வல்லியங்கள்
நெருங்கு  
-  புலிகள்  நெருங்கி  வாழும்;  மருங்கு எலாம் - மலைப்
பக்கங்களிலெல்லாம்;  வல்  இயங்கள்  -  (அவற்றை  விரட்ட) வலிய
பறைக் கருவிகள்; நெருங்கி மயங்கும் - மிகுதியாக ஒலிக்கும்.

குறத்தியர்      கிழங்குகளைத்     தோண்டி     எடுக்கவேண்டிய
பருவமாதலால்  குறவர்  பலவகைத்  தோற்கருவிகளை  முழக்குகின்றனர்
என்றார். எடா - செய்யா என்னும் வினையெச்சம்.                31
 

874.

கோள் இபம் கயம் மூழ்க. குளிர் கயக்
கோளி. பங்கயம். ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி. ஏய்.
ஆளி பொங்கும். அரம்பையர் ஓதியே.
 

கோள்  இபம் - வலிமையுள்ள  யானைகள்;  கயம்  மூழ்க - அம்
மலையிலுள்ள நீர்நிலைகளில் மூழ்கி விளையாட; குளிர் கயக் கோளி -
(அக்   குளத்தின்   கரையிலுள்ள)   குளிர்ச்சி   தரும்   பெரிய  ஆல
மரங்களும்;  பங்கயம்  ஊழ்க  -  தாமரை  மலர்களும் நலம் கெட்டு;
குலைந்த  
-  குலைந்தன;  ஆளி பொங்கும் - சிங்கங்கள் சீறியெழும்;
மரம்  பையர்  ஓதி  
-  மரங்களைப் பக்கத்தேயுடைய மலையில்; ஏய்
அரம்