பக்கம் எண் :

548பால காண்டம்  

பையர்  -  தங்கிய  தேவமாதரின்; ஓதி ஆளி பொங்கும் - கூந்தலில்
வண்டுகள் மகிழ்ச்சியுடன் தங்குவன.

யானைகள்     அம்   மலையின்   கயத்திலே  மூழ்குவதால் அந்த
நீர்நிலையிலுள்ள  தாமரையும்.   அக் குளக்  கரையிலுள்ள ஆலமரமும்
அழிந்தன.   ஒரு   பக்கம்   தேவமாதர்   தங்குவதனால்  அவர்களின்
கூந்தலில் தேனைப்  பருகி  வண்டுகள் களித்து நிற்கும் என்றார். ஆளி
-அளி என்பதன் நீட்டல் விகாரம். ஓதி: பெண் மயிர். மலை.        32
 

875.

ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி-
வாக மால் ஐயன் நின்றெனல் ஆகுமால்-
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக. மாலை கிடந்தது. கீழ் எலாம்.
 

மேக  மாலை -  (அம் மலையில்)  மேக வரிசைகள்; மேல் எலாம்
மிடைந்தன  
- மேலிடம்  முழுதும்  நெருங்கினவாய்; கீழ் எலாம் ஏக
மாலை
- கீழிடமெல்லாம் ஒரே மாலைத் திரளாக; கிடந்தது - கிடக்கும்
(அம்   மலை)   (அதனால்);   ஆகம்  ஆலையம்  ஆக  -  (தன்)
திருமார்பைக்  கோயிலாகக்  கொண்ட;  உளாள்  பொலி  - திருமகள்
விளங்குகின்ற;   வாக    மால்   உளார்   -   அழகிய   திருமால்
தங்கியிருக்கின்றார்;   எனல்   ஆகும்   -  என்று  சொல்லுவதற்குப்
பொருந்தும்.

அம்  மலையின்   மேற்புறத்தில்   எல்லாம்   மேகங்கள்   வரிசை
வரிசையாகப்  படிந்துள்ளன.  கீழ்புறத்தில்  மலர்மாலைகள் கிடக்கின்றன;
இவற்றால்  அம்  மலை  பலரால்  அருச்சிக்கப்பட்ட  மலர்மாலையைப்
பூண்ட  கரிய  திருமால்  போல  விளங்கும்  என்பது.  வாகு (அழகு) -
வாக  எனத் திரிந்தது - குறிப்புப் பெயரெச்சம்.  மேகம்  சூழ்ந்த  மலை
திருமாலுக்கும் மாலைகள் திருமகளுக்கும் உவமிக்கப் பெற்றன.       33
 

                                 மலைமேல் இனிது விளையாடல்
 

876.

பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என.
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி. அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி. நீங்கலர். தாம் இனிது ஆடுவார்.

 

பொங்கு தேன் நுகர் - பெருகும் தேனை உண்ணுகின்ற; பூ மிஞிறு
ஆமென
-  பூக்களில் மொய்க்கும் வண்டுகள் போல; எங்கும் மாதரும்
-  எல்லா   இடங்களிலும்  மகளிரும்; மைந்தரும் ஈண்டி - ஆடவரும்
நெருங்கி;  அத்  துங்க  மால்வரை  - ஓங்கிய பெரிய அம்மலையின்;
சூழல்கள் யாவையும்
- சாரல்களிலெல்லாம்; தங்கி - வசித்து; நீங்கலார்
-  (அம்  மலையை  விட்டு) பிரிந்து செல்ல மனம் இல்லாதவராய்; தாம்
இனிது ஆடுவார்
- (தாம்) இனிமையாக விளையாடினார்கள்.