(அங்கே தங்கிய ஆடவரும். மகளிரும்); இறக்கம் என்பதை - (மலையை விட்டு) இறங்குவது என்பதை; எண்ணுங்கால் அது - நினைத்தால் அச் செயல்; ஒர் பீழை பிறக்கும் - பெருந் துன்பத்தை உண்டாக்கும்; என்பது ஆதலால் - என்ற காரணத்தால்; எண்ணிலர் - (அதை மனத்தாலும்) நினையாதவரானார்கள் (அல்லாமலும் அவர்கள்); துறக்கம் எய்திய - விண்ணுலக இன்பத்தை நுகர்கின்றன; தூயவர் என - சான்றோர் போல; அன்னதன் மாண்பு எலாம் - அந்த மலையின் வளங்களையெல்லாம்; மறக்க கிற்றிலர் - மறக்க முடியாதவர் ஆனார்கள். துறக்கம் புக்க சான்றோர் அதன் சிறப்பை எண்ணுவதல்லாமல் வேறு எதனையும் மனத்தாலும் கருதாதவாறு போல. அந்த மலையைச் சேர்ந்த ஆடவரும் மகளிரும் அம் மலைவளத்தில் ஈடுபட்டிருந்தார்களேயன்றி வேறு எதையும் நினைக்கவில்லை என்பது. 35 |