பக்கம் எண் :

550பால காண்டம்  

879.

திணி ஆர் சினை மா மரம் யாவையும்
   செக்கர் பாய.
தணியாத நறுந் தளிர் தந்தன
   போன்று தாழ.
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின்.
   அங்கம் எங்கும்.
மணியால் இயன்ற மலை ஒத்தது -
   அம் மை இல் குன்றம்.

 

திணி  ஆர்  சினை - வலிமையான கிளைகள் கொண்ட; மா மரம்
யாவையும்
- பெரிய மரங்கள் யாவும்; செக்கர் பாய - செவ்வானத்தின்
ஒளி  வீசுவதால்;  தணியாத நறுந்தளிர் -  குறையாத சிறந்த தளிர்கள்;
ஈன்றன  போன்று  தாழ  
-  புதிதாகத்  தழைத்தன  போல விளங்க;
அங்கம் எங்கும்
- தன்னுடல் முழுவதும்; அணி ஆர் ஒளி - அழகிய
அந்தச்  செந்நிற  ஒளி;  வந்து  நிரம்பலின்  -  வந்து  நிறைவதால்;
அம்மை  இல்  குன்றம்  
-  குற்றமற்ற அந்த மலையானது; மணியால்
இயன்ற  
-  செந்நிறமுள்ள  மணிகளால்  இழைக்கப் பெற்றுள்ள; மலை
ஒத்தது
- மலையை ஒத்தது.

செவ்வானம்     வீசப்  பெறுவதால்  செந்தளிர் புதிதாக உண்டாகப்
பெற்றால்   போன்ற  பல   மரங்கள்   கவிந்த  அந்தச்  சந்திரசயிலம்
செம்மணி கொண்டு இழைக்கப்  பெற்றது  போல் விளங்கிற்று என்பது -
தற்குறிப்பேற்றவணி.                                         37
 

880.

கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய
   காட்சி யாலும்.
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு
   சிரங்க ளாலும்.
வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம்
   மார்பு அணிந்த
அண்ணல் கரியோன்தனை ஒத்தது -
   அவ் ஆசு இல் குன்றம்.*

 

கண்ணுக்கு இனிது ஆகி- கண்களுக்கு அழகுடையதாகி; விளங்கிய
காட்சியாலும்
-  தோன்றுகின்ற  தோற்றப்  பொலிவாலும்; எண்ணற்கு
அரிது ஆகி
- எண்ணுவதற்கு அரிதாகுமாறு; இலங்கு சிரங்களாலும் -
(ஆயிரக்  கணக்கில்)  விளங்கும்   முடிகளாலும்;  வண்ணம்  - அழகு
சேர்ந்ததாகிய;  கொழுஞ்  சந்தனச்  சேதகம்  -  வளமான  சந்தனக்
குழம்பை;  மார்பு  அணிந்த  -  (தன்) மார்பில் அணிந்த; அண்ணல்
கரியோன்தனை  
-  பெருமையுள்ள  திருமாலை;  அவ்  ஆசு இல் -
அந்தக்   களங்கம்   இல்லாத;   குன்றம்   ஒத்தது  -  குன்றமானது
ஒத்திருந்தது.