ஒருவர்க்கு ஒருவர் - ஒருவருக்கு ஒருவர்; ஊனும் உயிரும் அனையார் - உடம்பும் உயிரும் போல்பவராய் (நட்புக் கொண்ட) மகளிரும்; யானை இனமும் பிடியும் - ஆண் யானை இனமும் பெண் யானை இனமும் போலவும்; இகல் ஆளி ஏறும் - வலிமையுள்ள ஆண் சிங்கங்களும் (பெண் சிங்கங்களும்) போலவும்; மானும் கலையும் என - பெண்மான்களும் கலைமான்களும் போலவும்; தேனும் மிஞிறும் - தேனும். மிஞிறும்; சிறு தும்பியும் - சிறிய தும்பியும் ஆகிய வண்டின் சாதிகள்; பம்பி ஆர்ப்ப - நெருங்கி ஆரவாரிக்க; மால் வரை - பெரிய மலையின் அடிவாரத்தில்; வந்து இழிந்தார் - வந்து தங்கினார்கள். ஒருவர் மீது ஒருவர் பேரன்பு கொண்டு அங்கே சேனையோடு வந்த ஆடவரும் மகளிரும் யானை முதலியன போன்ற தோற்றத்தோடு தம் மாலைகளில் தேன் முதலிய வண்டுகள் நெருங்கி ஆரவாரிக்க அந்த மலையின் அடிவாரத்தில் வந்து தங்கினர் என்பது. 39 இருளும் தீப ஒளியும் |