மந்தாரம் முந்து மகரந்தம் - மந்தார மலர்கள் சொரியும் தேனின்; மணம் குலாவும்- மணங் கமழப் பெற்ற; அம்தார் அரசர்க்கு அரசன் தன் - அழகிய மாலையணிந்த தசரதனின்; அனீக வெள்ளம் - சேனைக் கடலனாது; நந்தாது ஒலிக்கும் - குறையாமல் ஒலிக்கும்; நரலை - பெரு முழக்கத்தையுடைய; பெரு வேலை எல்லாம் - பெருங் கடலின் இடம் முழுவதும்; செந்தாமரை பூத்து என - செந்தாமரை மலர் பூத்தது போல; தீபம் எடுத்த - விளக்குகளை ஏற்றி வைத்தது. சேனை தங்கியிருந்த இடம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டதனால் அது கடல் முழுதும் செந்தாமரை பூத்தது போல விளங்கியது என்பது - தற்குறிப்பேற்ற அணி. 41 மதியம் தோன்ற மகளிர் முகமலர்தல் |