பக்கம் எண் :

554பால காண்டம்  

பண்ணும் நரம்பின் பகையா
   இயல் பாணி ஓதை.
கண்ணும் முடை வேய் இசை. -
   கண்ணுளர் ஆடல்தோறும்-
விண்ணும் மருளும்படி
   விம்மி எழுந்த அன்றே.
 

கண்ணுளர் - கூத்தர் இயைந்த; ஆடல்தோறும் - ஆடு களங்களில்
எல்லாம்;   மண்ணும்  முழவு  -  மார்ச்சனை அமைந்த மத்தளத்தின்;
இன்  ஒலி
- இனிய ஓசையும்; மங்கையர் - ஆடலுக்கு இசைய பாடல்
பாடும்  மங்கையர்தம்;  பாடல் ஓதை - கலத்தோடு (இசைக் கருவிகள்)
பொருந்த அமைந்த கண்டத்து (மிடற்றுப்)  பாடல்  ஓசையும்; பண்ணும்
-  சுருதி  சுத்தமாக  அமைய  வேண்டி   முடுக்கி   அமைக்கப் பட்ட;
நரம்பின்  
-  நரம்புக்  கருவிகளில்;  பகையா  இயல்  ஓதை - பகை
நரம்பில்  விரல் மறந்தும் பதியாவாறு  அமைய  எழும் ஓசையும்; பாணி
-  தாளம் ஒத்து அமைந்த ஓசையும்;  கண் - தொளைகள்; உடைவேய்
- நன்கு அமைக்கப் பெற்ற புல்லாங்குழல்களின்  ஒலியும்  ஆகிய இவை
எல்லாம்; விண்ணும் மருளும்படி - தேவலோகத்தவரும் கேட்டு. கண்டு
மருளும்படி; விம்மி - மிக்கு; எழுந்த - எழுந்தன.

தேவசாதியர்     தம்முள்  ஒரு   வகையர்   கின்னரர்.   இவர்கள்
யாழ்த்திறம்  வல்லவர்.  தேவர்கள்   ஆடல்.  பாடல்.  மகளிர்   நலம்.
நுகர்தல்  இவற்றில்  மிக்க  ஆர்வத்தினர்.   அத்தகையரே  அயோத்தி
மக்கள் தம் ஆடல். பாடல் காண  கேட்க  நேரின் மருள்வர் என்பதாம்.
மார்ச்சனை:  முழவிற்கு  இடப்படும்  ‘ரவை’  -  இயைந்து  பாடுங்கால்
மிடற்றொலி  எது?  கருவி  ஒலி எது? எனப்  பிரிந்து  அறிதல் எஃகுச்
செவியர்க்கும்  எளிதன்றாம்.  நரம்புக்   கருவிகளை  இயக்கு  முறைகள்
வார்தல். வடித்தல் முதலிய எண்வகை என்ப (சிலம்பு).             44
 

887.

மணியின் அணி நீக்கி.
   வயங்கு ஒளி முத்தம் வாங்கி.
அணியும் முலையார். அகில்
   ஆவி புலர்த்தும் நல்லார்.
தணியும் மது மல்லிகைத்
   தாமம் வெறுத்து. வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக்
   கத்திகை சேர்த்துவாரும்.

 

மணியின் அணி - இரத்தின ஆபரணங்களை மார்பினின்றும்; நீக்கி
-  அகற்றி  அவற்றினும்  நொய்யது  ஆன;  வயங்கு ஒளி முத்தம் -
விளங்குகின்ற   ஒளி  உடைய  முத்து  மாலையை  (ஒருகாழ் முத்தம் -
ஒற்றைவடம்); வாங்கி - தோழியரிடம் பெற்று; அணியும் - அணி