புதுக் கொண்ட - பழகிய யானைகளைக் கொண்டு கொப்பத்து வீழ்த்திப் பிடித்த புதிய; வேழம் - கதம் மிக்க களிற்றி யானையை; பிணிப்போர் - தம் வயப்படுத்தக் கருதிய பாகர்கள்; புனை - தாம் புதுவதாகப் புனைந்த; பாடல் ஓதை - பாட்டின் ஓசையும்; மதுக் கொண்ட மாந்தர் - கள் மிகுதியாகப் பருகிய ஆண்கள்; மடவாரின் - தம் உரிமை மகளிரிடத்து; மிழற்றும் - காமக்குறிப்பு தோன்ற பேசும் (குழறல். உளறல்); ஓதை - ஓசையும்; பொதுப்பெண்டிர் - வேசையர்; அல்குல் புனை - தம் இடையில் அணிந்த; மேகலை - கிண்கிணி பொருந்திய மேகலையினால் எழுப்பும்; பூசல் ஓதை - சலசலப்பு ஒலியும்; கதம் கொண்ட யானை - மதவெறி மிக்க களிறுகள்; களியால் - செருக்கு மிகையால்; களிக்கின்ற - பிளிறுகின்ற; ஓதை - ஓசையும் அப்பாடி நகரில் எழுந்தன. யானை வீழ்த்தும் பாகர்கள் தொழிலில் திறம் மிக்கவர். சினம் மிக்க யானைகளின் சினம் தணிவித்துப் பெரிய கம்பத்திலே சேர்த்தற்கு விரவு மொழி பயில்வர் (மலைபடு 326) வயப்படுத்த இசைப்பாடல்கள் பாடவும் செய்வர். கருங்களிற்று ஒருத்தலும். கனிந்த அவ்விசைக்கு வயப்படும் என கலித்தொகை கூறும். பொதுப் பெண்டிர் தம் இல் புக்காரை. அவர்கள் விடுதல் அறியா |