16. பூக் கொய் படலம் வேந்தனுடன் சென்றோர் வனங்களில் மலர்கொய்து மகிழ்வது கூறுவது: தசரதச் சக்கரவர்த்தியும் நாட்டு மக்களும் காலைப் பொழுதில் சோணையாற்றங் கரையை யடைந்தனர். நண்பகல் நேரம். மாதர் மலர் கொய்யச் சோலையினை யடைந்தனர். அங்கு எய்திய அவர்கள் அழகிற்கு எதிர்நிற்க இயலாது மயில் முதலான பறவையினங்கள் நாணி ஒதுங்கின. மாதர் ஆடல் ஆடவர்க்கு மையலை நல்கிற்று. மாதர் தீண்டலால் மலர்க் கொம்புகள் மலர் ஈந்து வணங்கின. அச்சோலை. மகளிர்க்கும் மைந்தர்க்கும் புலவிக்குரிய களம் ஆயிற்று. மன்னரும் மக்களும் பல்வகை இன்பங்கள் துய்த்து மகிழ்ந்த பின்னர் நீராடப் புக்கனர். காலையில் சோணை ஆற்றை அடைதல் அறுசீர் ஆசிரிய விருத்தம் |