பக்கம் எண் :

586பால காண்டம்  

வழக்கமாய்     மாலையணிந்து  பொலியும்  தோள்களையுடையவன்.
வெறுந்தோளனாய்  வருதலால்.  மாலையை  யார்க்கு ஈந்தானோ என்று
ஐயுற்று இதழ் துடிக்கச் சினங்  காடடினாள்  என்பது குறிப்பால் தோன்ற
“அவள்  தொண்டை  வாயில்  துடிப்பு  ஒன்று  சொல்ல” என்றார். வீர
மார்பினர்  ஆயினும்  மெல்லிய பெண்மையின்  சினத்தால்  வீரமிழந்து
தவித்தான்   என்பார்.   “தண்டுபோல்    புயத்தாள்    தடுமாறினான்”
என்றார்.                                                  38

                                          புனலாடப் புறப்படல்
 

928.

ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்.
தூய தண் நிழல் சோலை. துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர்; வெண் திரை
பாயும் தீம் புனல் - பண்ணை சென்று எய்தினார்.

 

ஏயும்   தன்மையர் - (இதுகாறும் கூறியவாறு பூக்கொய்தலும் புலவி
கொள்ளுதலும்  முதலிய)  செய்கைகளை  மேற்கொண்டவர்களான; இவ்
வகையார்  எலாம்  
-  இத்தகைய ஆடவரும் பெண்டிரும்; தூய தண்
நிழல்   சோலை   
-   தூய்மையுடைய  குளிர்ந்த  நிழலைத்   தரும்
அச்சோலையிலே;   துறுமலர் வேயும்   செய்கை   வெறுத்தனர்  -
நெருங்கிய    மலர்களைப்   (பறித்துச்)    சூடுகின்ற    செயலின்மேல்
விருப்பமில்லாதவர் ஆயினர்; வெண்திரை பாயும் தீம்புனல் பண்ணை
- வெள்ளை அலைகள் பாயும்  இனிய  நீரில் விளையாடுவதில்; சென்று
எய்தினார்
- (மனம்) சென்றதனால் (நீர்நிலைகளை) அடைந்தார்கள்.

துறுமலர்     - வினைத்தொகை.   புனல்பண்ணை: நீர்விளையாட்டு.
பழகப்  பழகப்  பாலும்  புளிக்கும்  ஆதலின்  மலர்வேயும் செய்கையும்
வெறுத்தனர்  என்றார். செயல்மாற்றம் சோர்வு  மாற்றும்  ஆதலின் பூக்
கொய்தோர்  இனிப் புனல் விளையாடப்  போகின்றனர்  என  அடுத்தப்
படலத்துக்குத் தோற்றுவாய் அமைத்தார்.                        39