பக்கம் எண் :

588பால காண்டம்  

வினை     - துன்பம்.  ஆகுபெயர். அனகர் - குற்றமற்றவர். பாவம்
அற்றவர்.   நாட்டு   யானைகள்    அடிமைப்படுதல்  போலக்  காட்டு
யானைகள்.  யாருக்கும்  அடிமைப்  படாதன  வாதலின்.   உரிமைமிக்க
அவ்வாடவரையும    மகளிரையும்    “வனகரி”களுக்கு    உவமித்தார்.
வனங்களில்  வாழும்  யானைகள்   உச்சிப்   போதில்  வெப்பம்  தீரச்
சுனையாடும்  வழக்கம்   அறிந்திருந்த   கவிஞர்பிரான்.  கோசல நாட்டு
மகளிரையும்  மைந்தரையும்   “வனகரி  பிடிகளோடு   வருவன  என்ன
வந்தார்”  என்று  உவமித்து மகிழ்ந்தார்.  அவ்வுலகத்தோர்  வருவதற்கு
அருத்தி  (விருப்பம்)   புரிகின்றது   அயோத்தி  மாநகரம்”  (கம்.  93)
ஆதலின்.   அயோத்தி   நகர  மகளிரும்  மைந்தரும்  “துறக்க நாட்டு
விண்ணவர்  கணமும்”   நாணும்  பேரழகோடு  மலர்ப் பொய்கைகளை
நோக்கி   வருங்   காட்சியை.    கவிஞர்   காட்டுகின்றார்.   “வனகரி
பிடிகளோடு   வருவன  என்ன   வந்தார்”   என்னும்  உவமையினால்
வலிவோடும்     பொலிவோடும்    துணைவியரை     அணைத்தவாறு
ஆடவர்கள்   பெருமிதப்  பீடுநடையோடும்   தடாகங்களில்  இறங்கும்
காட்சியை மன ஓவியப்படுத்துகிறார்.                             1
 

930.

அங்கு. அவர். பண்ணை நல் - நீ
   ராடுவான் அமைந்த தோற்றம்.
கங்கை வார் சடையோன் அன்ன
   மா முனி கனல. மேல்நாள்.
மங்கையர் கூட்டத்தோடு
   வானவர்க்கு இறைவன் செல்வம்.
பொங்கு மா கடலில் செல்லும்
   தோற்றமே போன்றது அன்றே.
 

அங்கு     அவர் -  அந்த  நீர்நிலைகளில். ஆடவரும் மகளிரும்;
நல்நீர்ப்  பண்ண  
- நல்ல நீர் விளையாட்டை; ஆடுவான் அமைந்த
தோற்றம்   
-   ஆடுவதற்குப்  புறப்பட்ட  காட்சியானது;  மேல்நாள்
கங்கைவார்    டையோள்   அன்ன    
-    கங்கைநதி   ஒழுகும்
சடையையுடைய   சிவபெருமானைப்   போன்ற;   மாமுனி  கனல  -
பெருமைக்குரிய  துருவாச  முனிவர்   வெகுண்டதனால்;  வானவர்க்கு
இறைவன்  செல்வம்
- தேவர்களின் தலைவன்  ஆகிய இந்திரனுடைய
(கற்பகத்தரு   காமதேனு.   வெள்ளையானை.    சகங்கநிதி    முதலிய)
செல்வங்கள்  யாவும்;  மங்கையர்  கூட்டத்தோடும்  -  (அவனுடைய
அரம்பை. ஊர்வசி முதலிய) மகளிரின் குழுவோடு; பொங்குமா கடலில்
செல்லும்  
-  (பலவளங்களும் நிறைந்த)  திருப்பாற்கடலுக்குள்  சென்று
சேர்வதற்கு   (அமைந்த);   தோற்றம்  போன்றது   -  காட்சியினை
ஒத்திருந்தது.

தற்குறிப்பேற்ற   அணி.     அன்று.  ஏ - அசைகள்.  அமைந்த -
பொருந்திய.  ஆயத்தமான.  தேவ  உலகச்  செல்வமும்.   தேவ  உலக
மகளிரும் அயோத்திச் செல்வத்திற்கும்.  அயோத்தி  மகளிர்க்கும்  சமம்
ஆகக்  கூறினார்.  தேவேந்திரனின்  அயிராபத   யானையைப்  போல
ஆடவரும்.  அவனுடைய  அரம்பை  முதலிய  மடந்தையரைப்  போல
மகளிரும்.  அவனுடைய சங்க  நிதி.  பதுமநிதிபோல மகளிர் ஆபரணச்
செல்வங்களும்  இருந்தன  என்க.  தேவ  உலகச்செல்வம்  அனைத்தும்
அயோத்தி மகளிரிடம் இருந்தன என்பது கருத்து.                  2