பக்கம் எண் :

  நீர்விளையாட்டுப் படலம்591

மேல்     தூவுகின்ற  வரும்; புண்டரீகக்கை கூப்பி - தாமரைமலர்கள்
போன்ற (தம்) கைகளைக் குவித்து; புனல் முகந்து இறைக்கின்றாரும் -
நீரை மொண்டு இறைக்கின்றவரும்.

“பாலொடு    தேன் கலந்து அற்றே பணிமொழி; வால் எயிறு ஊறிய
நீர்”   (திருக்.   1121)  ஆதலின்.   “தூநீர்  தொண்டைவாய்ப்  பெய்து
கொழுநர்மேல்   தூவுவாரும்”    என்றார்.   துப்பை   வென்ற   செந்
துவர்இதழ்ச்   செய்ய   வாய்த்   தூநீர்   கொப்பளித்தனள்;  ஆம்பல்
அம்தேன்  எனக்   குடித்தான்”   (திருவிளை.   தருமிக்கு. 59) என்பார்
பிறரும். “தொண்டைவாய்ப் பெய்து  தூநீர்  கொழுநர்மேல் தூவுவாரும்”
என  இருந்த  படியே  (கொண்டுகூட்டாமல்)  கொண்டு. மகளிர் வாயில்
நீரைப்  பெய்து.  நீரைத் தூய்மையாக்கிப்  புனித  நீராகக்  கணவர்மேல்
தெளித்தனர்  எனவும் கொள்ளலாம்.  புனல்விளையாட்டில்  சுண்ணமும்
கோதையும்  வீசலைச்  சிந்தாமணி   (2659)யும்.  பரிபாடலும்  (9:39-40).
கலித்தொகையும் 67:6; 128: 18-19) கூறும்.                         5
 
 

934.

மின் ஒத்த இடையினாரும்.
   வேய் ஒத்த தோளினாரும்.
சின்னத்தின் அளக பந்தி
   திருமுகம் மறைப்ப நீக்கி.
அன்னத்தை. ‘வருதி. என்னோடு
   ஆட’ என்று அழைக்கின்றாரும்;
பொன் ஒத்த முலையின் வந்து
   பூ ஒற்ற. உளைகின்றாரும்;
 

மின்     ஒத்த    இடையினாரும்    -    மின்னலைப்போன்ற
இடைகளையுடையவர்களும்;  வேய்  ஒத்த  தோளினாரும்  -  (இள)
மூங்கிலைப்  போன்ற   தோள்களையுடையவரும்  ஆகிய  சில மகளிர்;
சின்னத்தின்   அளகபந்தி   
-   விடுபூக்களை  யணிந்த  முன்உச்சி
மயிர்களின்   வரிசை;  திருமுகம்  மறைப்ப  நீக்கி  - நீரில்  மூழ்கி
எழுகையில்  (தம்) அழகு முகத்தை  மறைக்க  (அவற்றைக்  கரங்களால்)
விலக்கி;    அன்னத்தை   வருதி   என்னோடு   ஆட    என்று
அழைக்கின்றாரும்   
-   (அப்போது   அருகில்  நீந்திய)   அன்னப்
பறவையைப்   (பார்த்து)   ‘என்னோடு   விளையாட   வா’     என்று
அழைக்கின்றவர்களும்;   பொன்   ஒத்த   முலையின்  -   (தேமல்
பரந்திருத்தலால்)  பொன்நிறங் கொண்டுள்ள தனங்களின் மேல்;   வந்து
பூ   ஒற்ற  உளைகின்றாரும்  
-  (அலையடித்தலால்)  பூக்கள்  வந்து
படுவதற்கும் (மனம்) வருந்துகின்றவர்களும்;-

சின்னம்     - விடுபூ.  எப்போதும்  மலரோடும்  கூந்தல்   இருக்க
வேண்டுதலால்.  குளிக்கையில்  சின்னச்சின்ன   விடுபூக்களை   மகளிர்
அணிந்திருந்தனர்.  பூப்பட்டாலும்   வருந்துவன   என்று   தனங்களின்
மென்மை     சுட்டியவாறு.     கவிஞர்     கற்பனைக்     கண்ணால்
கண்ணாரக்கண்டு   காட்சிகளைக்   கற்பார்க்குக்   காட்டும்   நுண்மை.
“சின்னத்தின்  அளகபந்தி  திருமுகம்   மறைப்ப.  நீக்கி”  என்பதனால்
விளங்கும்.  மனப்படங்களை  அடுக்கடுக்காகத்  தரும்  அளவிற்கு  ஒரு
காவியம்