விட்ட ஆகாயத்தையும்; உள்நிறை தாமரைப் பூ எலாம் - (தன்)னுள்ளே நிறைந்திருந்த தாமரை மலர்கள் யாவும்; குடிபோனதும் போன்றது - வேறிடத்திற்குக் குடி பெயர்ந்து போய்விட்ட பொய்கையையும் போல் ஆயிற்று. தன்னிடம் நீராட வந்த அழகுபொலியும் கோசலநாட்டு ஆடவராலும் மகளிராலும் தனியழகு பெற்றிருந்த நீர்நிலை. அவர்கள் பெயர்ந்ததனால் விண்மீன்களை இழந்து போன வானத்தையும். தாமரை மலர்களை இழந்துவிட்ட தடாகத்தையும் போலப் பொலிவிழநது போயிற்று என்று ஏங்குகிறார். “மீன் எலாம் சூழ நின்ற விரிகதிர்த் திங்களையும்” “வண்ணப் பூவெலாம் மலர்ந்த பொய்கைத் தாமரையையும்” (கம்ப. 943) உவமித்துள்ளார் ஆதலின். இங்கு. “தண்மதி தன்னொடும். உள்நிறை தாமரைப் பூ எலாம் குடிபோனதும் போன்றது” என்று பொருத்தமுற உவமித்தார். மகளிர் வெளியேற்றத்தைப் “பூவெலாம் குடிபோனது போன்றது” எனல் மகா கவிகட்கே வாய்க்கவல்ல சொல்லாட்சி எனலாம். 31 கதிரவன் கடல் புகலும் சந்திரன் எழுச்சியும் |