பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்611

965.எள்ள அருந் திசைகளோடு யாரும். யாவையும்.
கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால்.
வள் உறை வயிர வாள் மகர கேதனன்
வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே.
 

எள்ள அருந்திசைகளோடு யாரும் யாவையும் - இகழ்தற்கு அரிய
திக்குகளுடனே    அத்திக்குகளிலே     உள்ள     உயர்திணையாரும்
அஃறிணைப்  பொருள்களும்; கொள்ளை வெண் நிலவினால் கோலம்
கொள்ளலால்  
-  கொட்டிக் கிடக்கிற நிலவின் ஒளியால் (வெண்ணிறக்)
கோலம்  கொண்டதனால்; வேலை ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகம்;
வள்  உறை  வயிரவாள் மகர  கேதனன்
- கூர்மை தங்கும் வலிமை
பொருந்திய   வாளினையுடைய  மகர   மீனைக்  கொடியாக   உடைய
மன்மதனுக்கு;    வெள்ளணி    ஒத்தது   -   பிறந்தநாள்   விழாக்
கொண்டாடுவது போன்றிருந்தது.

உலகத்து     உயிர்கள்  யாவும் பிறக்க  உதவியவன்;  இன்பத்தைத்
தருபவன்   மன்மதன்  ஆதலால்.  அவையாவும்   அவனுக்கு   நன்றி
மறவாமல்   வெள்ளாடையணிந்து   பிறந்த    நாள்    கொண்டாடியது
போன்றிருந்தது  உலகை  நிலா ஒளி குளிப்பாட்டிய  கோலம்  என்றார்.
பிறந்த   நாள்   விழாவிற்கு   வெள்ளாடையணிதல்   மரபு   ஆதலை
“வெள்ளணி  நாள்”  எனும்  சொல்லே  குறித்தது.  வெள்ளணி நாள் -
பிறந்தநாள்:  பு.வெ.  212.  மகர கேதனன் -  மகர  மீனைக்  கொடியில்
பொறித்த மன்மதன். மகரம்: சுறா மீன். கேதனம்: கொடி.            4

                                        மகளிர் மதுப் பருகுதல்
 

966.

தயங்கு தாரகை புரை தரள நீழலும்.
இயங்கு கார் மிடைந்த கா எழினிச் சூழலும்.
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்.
வயங்கு பூம் பந்தரும். மகளிர் எய்தினார்.

 

தயங்கு தாரகை புரை தரள நீழலும்- ஒளிர்கின்ற விண்மீன்களைப்
போன்ற  முத்துப் பந்தலின்  நிழலிலும்;  இயங்குகார்  மிடைந்த  கா
எழினிச்  சூழலும்
-  வானில் இயங்கும் மேகம் நெருங்கித் தங்குகின்ற
சோலைகளில் திரைச்  சேலைகளிட்ட இடங்களிலும்; கயங்கள் போன்று
ஒளிர்  பளிங்கு அடுத்த  கானமும்  
-  குளங்கள் போல ஒளிர்கின்ற
பளிங்கறைகள்  பொருந்திய  தோட்டங்களிலும்;  வயங்கு பூம்பந்தரும்
மகளிர்   எய்தினர்   
-   (மணம்)  விளங்கும்  மலர்ப்பந்தல்களிலும்
பெண்டிர் சென்று அடைந்தனர்.

முத்துப்     பந்தல்.   திரைப்பந்தல்.   பளிங்கறை.   மலர்ப்பந்தல்.
ஆகியவற்றின்  குளிர் நிழல்களில் மெல்லியல்  மகளிர்  தங்கினர் எனச்
செல்வ  வளமும். அவர் தம் மென்மைப் பாங்கும்  ஒருங்கு  சுட்டினார்.
கரிய    திரைகளை    நாற்புறமும்   சூழவிட்டு    அவற்றின்   மேல்
மாலைகளைத் தொங்கவிட்டுப் பாடி வீடு அமைக்கும்