பக்கம் எண் :

612பால காண்டம்  

வழக்கம்     ஆதலின்  தார்மிடைந்த  எனப்  பாடங்கொண்டு “இயங்கு
தார்மிடைந்த  கா  எழினிச்  சூழலும்”   என்றார்  எனினுமாம்.  எழினி:
திரை. தார்: மாலை.                                          5
 

967.

பூக்கமழ் ஓதியர். போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்.
ஆக்கிய அமிழ்து என. அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா. மாந்தல் மேயினார்.

 

பூக்கமழ்     ஓரியர்   -    பூக்களின்   நறுமணம்   கமழ்கின்ற
கூந்தலையுடைய பெண்டிர்;போது போக்கிய சேக்கையின் விளைசெரு
-  மலர்கள்  (மிகப்)  பரப்பிய  படுக்கைகளிலே   விளைகின்ற  கலவிப்
போரிலே;   செருக்கும்   சிந்தையர்   -   களிக்க   வேண்டுமென்ற
மனத்தினராய்;  ஆக்கிய  அமிழ்தென - அப்போரில் வெல்வதற்கென
ஆக்கப்பட்ட  அமிழ்தம்  போல; அம்பொன் வள்ளத்து வாக்கிய பசு
நறை  
-  அழகிய  பொற்கிண்ணத்தில் ஊற்றிய  புதுமதுவைப்; மாந்தல்
மேயினார்
- பருகத் தொடங்கினர்.

சோர்வு.   களைப்பு ஆகியவை போக்கி. இறப்பு நீக்கி. இளமை நல்க
வல்லது   அமிழ்து  ஆதலின்.   கலவிப்   போர்க்கு  இவை  செய்யும்
அமிழ்தென்று   மதுவுண்டனர்  என்க.   போது   போக்கிய:  மலர்கள்
போடப்பட்ட பொழுது போக்குவதற்காக. சிலேடை. அவனிப்  போருக்கு
ஆக்கிய  மது  அன்று  இது:  அமளிப்  போருக்கு  என்றே  ஆக்கிய
அமிழ்தம்  இது  என்பார்.  “சேக்கையின்   விளை  செருச்  செருக்கும்
சிந்தையர் ஆக்கிய அமிழ்தென்” என்றார்.  சேக்கை:  படுக்கை.  அமளி.
செரு:  போர்.  வாக்கிய:  வார்த்த. செம்பொன் வள்ளம்  வளம்  மிகுதி
குறித்தது.                                                  6
 

968.மீனுடைய விசும்பினார். விஞ்சை நாட்டவர்.
ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்.
மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார்-
தேனுடைய மலரிடைத் தேன் பெய்தென்னவே.
 

மீன்     உடை  விசும்பினார் - விண்மீன்களையுடைய  வானுலக
மங்கையரும்;  விஞ்சை நாட்டவர் - வித்தியாதர உலகத்து வித்தியாதர
மகளிரும்;   ஊனுடை   உடம்பினார்  -  ஊன்  உடம்பினராகி  இம்
மகளிர்க்கு;  உருவம்  ஒப்பிலார் - அழகில் ஒப்பாகார் (எனத் தக்க) ;
மாதனுடைய நோக்கினார்
- மானை வென்ற விழியினராகிய மங்கையர்;
தேனுடை   மலரிடை  
-  தேனையுடைய  மலரின்  கண்ணே;  தேன்
பெய்தென்ன   
-  (மேலும்)  தேனைச்  சொரிந்தாற்  போல;  வாயில்
மாந்தினர்
- (தங்கள் மலர்) வாயால் மதுவுண்டனர்.

மகளிர்     வாய்.   மலர்   போன்றும்.  அதில்  ஊறும் நீர். தேன்
போன்றும்   இருத்தலால்.   அவர்கள்   மேலும்   தேன்   எனப்படும்
மதுவையுண்ணுதல்  “தேனுடை  மலரிடை  தேன்   பெய்ததற்கு”  நிகர்
ஆயிற்று. வால் எயிற்று ஊறிய நீர் தேன்