வாள் நுதல் ஒருத்தி - ஒளி நிறைந்த நெற்றியுடையாள் ஒருத்தி; தடன் ஒக்கும் நிழலை - (தன்னைப் போன்றே அழகின்) பெருமையில் ஒத்திருக்கும் தனது நிழலை; பொன்செய் தண்நறும் தேறல் வள்ளத்துக் காணா - பொன்னால் செய்யப்பட்ட குளிர்ந்த மணமுள்ள மதுவின் கிண்ணத்தில் கண்டு; தோழி. உடன் ஒக்க உவந்து நீயும் உண்ணுதி என்றாள் - “தோழியே! நீயும் என்னோடு இணைந்து மகிழ்ந்து (இம்மதுவினை) உண்ணுவாய்!’ என்று வேண்டினாள்; விடன் ஒக்கும் நெடியநோக்கின் - (விரும்பாதார்க்கு) நஞ்சனைய நீண்டவிழிகளையும்; அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம் - (உண்பாரை நீண்டு வாழ்விக்கும்) அமிழ்தம் போல. கேட்டார் செவிக்கு நெடுநாள் இனிக்கும் இன் மொழியும் உடைய மகளிருடைய; மடன் ஒக்கும் மடனும் உண்டே? - அறியாமை போன்ற அறியாமை வேறு எவரிடத்தும் உண்டோ? (இல்லை என்க) அச்சம். மடம். நாணம். பயிர்ப்பு என்னும் மகளிர் நாற்குணங்களுள் ஒன்றான இம் மடம் பெண் இயல்புக்கு மேலும் அழகு சேர்ப்பதனை இப்பாடலாலும் காண்க. வேற்றுப் பொருள் வைப்பணி. காணா - கண்டு ; செய்யா என்னும் எச்சம். “இருநோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு நோய் நோக்கு” (திருக். 1091) என்பராதலின். “விடன் ஒக்கும் நோக்கு” என்றார். கேட் |