பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்617

எல்லா   இனிமைப் பொருட்கும் இனிமைகொடுக்க வல்லவை குழலும்
யாழும்.  அவற்றுக்கும்  இனிமை  கொடுக்க  வல்லவை இவள் மழலைச்
சொற்கள் என்க.

கட்   சாடியுள் மணத்திற்காகக் குவளை. தாமரை முதலிய மலர்களை
இட்டு  வைத்தல்  மரபு.  அந்த  மலர்களை மொய்க்க வண்டுகள் வந்து
விட்டன   என்று   கருதிச்  சாடியுள்  தெரிந்த   தன்   விழி  நிழலை
ஓட்டுகின்றாள்!   மதுப்பழக்கம்  நகைப்பிற்கு   இடம்   ஆனவற்றையே
செய்யும் என மேலும் உணர்த்தியவாறு.                          13
 

975.

களித்த கண் மதர்ப்ப. ஆங்கு ஓர்
   கனங் குழை. கள்ளின் உள்ளால்
வெளிப்படுகின்ற காட்சி
   வெண் மதி நிழலை நோக்கி.
‘அளித்தனென் அபயம்; வானத்து
   அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை; அஞ்சல்!’ என்று ஆங்கு.
   இனியன உணர்த்துகின்றாள்.
 

ஆங்கு.     ஓர்   கனங்குழை  -   அங்கே.  பொன்னாலியன்ற
குழையணிந்தாள் ஒருத்தி; கள்ளின் உள்ளால்வெளிப்படுகின்ற காட்சி
வெண்  மதி நிழலை
- மதுவின் உள்ளே பிரதிபலித்துக் தோன்றுகின்ற
அழகிய  வெள்ளைத்  திங்களினது பிம்பத்தை; களித்த கண் மதர்ப்ப
நோக்கி   
-   கள்ளுண்டதனால்   வந்த   களிப்பு.  தன்  கண்களில்
தோன்றுமாறு   பார்த்து;   நீ வானத்து  அரவினை  அஞ்சி  வந்து
ஒளித்தனை  
-  மதியே.  நீ  வானத்தில்  உன்னைத்   தீண்ட  வரும்
பாம்புகளுக்கு    அஞ்சி     இங்கு     வந்து    ஒளிந்திருக்கின்றாய்;
அளித்தனென்  அபயம்  அஞ்சல்  
-  (ஆகையால்.  நான்  உனக்கு)
அபயம்    அளித்தேன்;   அஞ்சற்க;  என்று   ஆங்கு   இனியன
உணர்த்துகின்றாள்  
-  என்பன  போன்ற  இனிய  மொழிகளைக்
கூறுபவள் ஆனாள்.

சந்திர     பிம்பத்தை  வெண்மதி எனப் பிழையாகக் கருதி. அதற்கு
அபயமும் கொடுக்கின்றாள்  என்பதனால்.  மது  வெறி. பிழையின் மேல்
பிழைபுரிவிக்க வல்லது என உணர்த்தியவாறு.  குடிவெறியினும்   அபயம்
நல்கும் குணமுடையார் கோசல நாட்டார் என்பதும் குறித்தவாறு.     14
 

976.

அழிகின்ற அறிவினாலோ.
   பேதைமையாலோ. ஆற்றில்
சுழி ஒன்றி நின்றது அன்ன
   உந்தியாள் தூய செந் தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த
   பந்தரைப் புரைத்துக் கீழ்வந்து