பக்கம் எண் :

624பால காண்டம்  

இரு     செயல் செய்வார்க்கும்  பொது நிகழ்வுகள் ஆகும். அசதியாடல்
-  பரிக  சித்தல். “ஒறுக்கப்  படுவார்  இவர் என்று அங்கு அசதியாடி”
(சீவக.  1871)  என்பது  காண்க;  கள்  இச்  செயல்களைச்  செய்தலால்.
இவற்றைச்  செய்யும்  கொழுநரோடு அது ஒத்தது  எனக்  கிடந்தவாறே
பொருள்  கொள்ளினும்   அமையும்.  “கொழுநரும்  கள்ளும்  ஒத்த” -
திணை   வழுவமைதி.    உண்டாட்டுப்   படலமாதலால்   கள்ளுக்குச்
சிறப்பளித்து  அஃறிணை  முடிவினை  உயர்திணைக்கும்  ஈந்தார்.  கள்
உண்பார்   அஃறிணை  முடிவினை  உயர்திணைக்கும்   ஈந்தார்.   கள்
உண்பார் அஃறிணைக்குச் சமம் எனக் கருதினார்.                 24
 

986.

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை.
அனகனுக்கு அறிவி’ என்று. அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள். ‘தோழி! நீயும் என்
மனம் எனத் தாழ்தியோ? வருதியோ?’ என்றாள்.

 

கனைகழல்     காமனால்   கலக்கம்   உற்றதை  -  ஒலிக்கும்
வீரக்கழல்களை  யணிந்த  காமதேவனால்.   (காம  நினைவால்)   யான்
கலக்கம்  உற்றுள்ளேன்  என்பதை;  அனகனுக்கு  அறிவி - குற்றமற்ற
(என்)  கணவனுக்கு  அறிவிப்பாயாக;  என்று  அறியப் போக்கும் ஓர்
இனமணிக்  கலையினாள்  
- என்று கூறி  (தன்தோழியை). பிரிந்துள்ள
தன்  கணவனிடம்  அனுப்ப  முன்வந்த   உயர்   மணிகள்  அழுத்திய
மேகலையணிந்த  மாது  ஒருத்தி;  தோழி நீயும்  என்  மனம் எனத்
தாழ்தியோ?   வருதியோ?  என்றாள்  
- (தன்  தோழியை  நோக்கி)
தோழியே! நீயும் என் மனத்தினைப் போல  (அவனிடத்திலேயே)  தங்கி
விடுவாயோ? மீண்டு வருவாயோ? என்று (ஐய வினா) எழுப்பினாள்.

என்     மனம் என்னிடம் இல்லை என்பதை நயமுற விளக்கியவாறு.
உண்டு  களித்திருக்கும்  இப்போது. அவன்  இல்லாமையால்  மன்மதன்
அம்பால்   மிக   வருந்துகின்றேன்;   அவனைச்    சென்று   உடனே
அழைத்து  வருவாயா?  அல்லது  என்  மனம்   போல.   அவனிடமே
இருந்து  விடுவாயா?  என்று  ஓயாது   அவனையே   நினைத்திருக்கும்
மனத்தை.   தோழிக்குக்   கூறுவாள்   போல்   சாடுகிறாள்.  நெஞ்சம்
அவனிடம்  சென்றது. “கெட்டார்க்கு நட்டார் இல்  என்பதோ  நெஞ்சே
நீ. பெட்டாங்கு அவர்பின் செலல்” (திருக். 1293)                 25
 

987.

மான் அமர் நோக்கி. ஓர் மதுகை வேந்தன்பால்.
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்.
போனவர் போனவர் தொடரப் போக்கினாள்;
தானும். அங்கு. அவர்கள்பின் தமியள் ஏகினாள்.
 

மான்     அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்பால் - மான்கள்
விரும்பும்  கண்ணுடையாள்  ஒருத்தி.  ஒப்பற்ற  வலிமை வாய்ந்த (தன்)
கணவனிடத்தில்;  ஆனதன்  பாங்கியர் ஆயினார் எலாம் - (தனக்கு)
விருப்பமான தோழியர் ஆனவரையெல்லாம்; போனவர் போனவர்