பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்625

தொடரப்     போக்கினாள்  -   (பின்னே)  சென்றவர்கள் (முன்னே)
சென்றவர்களைத்   தொடருமாறு  தொடர்ந்து   அனுப்பிய   வண்ணம்
இருந்தாள்; தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் - (இனி
அனுப்பத்  தோழியர்  இல்லை யாதலால்)  தன்னைத்  தானே தூதாக்கி.
கணவன்   இருக்குமிடம்   நோக்கி    (இவளும்)   அவர்கள்  பின்னே
தனியாளாய்ப் புறப்பட்டாள்!

மதுவுண்டவுடன்    எழுந்த காம வேட்கையால். கணவனிடம் சென்று
சேரும்  கால  இடை வெளி  தராமலேயே  தூதனுப்பித் தூதனுப்பி இனி
அனுப்ப   யாரும்   இல்லை   யாதலால்   தானும்  தூதானாள்  எனத்
தலைவியின்  ஆரா  அன்பும்  தீரா  வேட்கையும் அறிவித்தவாறு. கால
இடை வெளியின்றி அடுக்கடுக்காகத்  தோழியரை  அனுப்பிக் கொண்டே
இருந்தாள் என்பதனை. “போனவர் போனவர்  தொடரப்  போக்கினாள்”
எனும்  அடுக்கால்  உணர்த்திய  திறம் காண்க.  மிக  வேட்கை உயர்வு
பாராது  ஆதலால்.  தான்  தலைவி நிலையிலிருந்தும்  தாழ்ந்து  தானும்
தூதியானாள்  என்பார்.  “தானும்  அங்கு  அவர்கள்   பின்   தமியள்
ஆயினாள்” என்றார்.                                        26
 

988.

விரை செய் பூஞ் சேக்கையின் அடுக்க மீமிசை.
கரை செயா ஆசை அம் கடல் உளாள். ஒரு
பிரைச மென் குதலையாள். கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள்.

 

விரைசெய்  பூஞ்சேக்கையின்  அடுக்கம்  மீமிசை- மணம் மிகும்
மலர்ப்படுக்கையின்  அடுக்குகளின்  மேலே;  கரை செயா ஆசை அம்
கடல்உளாள்   
-   கரையிட்டுத்   தடுக்க   இயலாக்  காதல்  கடலில்
மூழ்கியுள்ளவளான;  ஒரு  பிரைசமென் குதலையாள்  -  தேன் என
இனிக்கும் மழலை மொழி உடையாள் ஒருத்தி; கொழுநன் பேர் எலாம்
உரைசெயும்    கிள்ளையை    
-    (தன்)    கணவனுக்கு    உரிய
பெயர்களையெல்லாம்    சொல்லுகின்ற   கிளியை  (எடுத்து);  உவந்து
புல்லினாள்
- (உள்ளம்) மகிழ்ந்து தழுவிக் கொண்டாள்.

“அடுத்த     மீமிசை” என்பதிலும்   “அடுக்க  மீமிசை”   என்பது
இடத்திற்கேற்ற   பொருட்   சிறப்புறுதலால்   அப்பாடமே   கொள்ளப்
பெற்றது.

கணவனைப்    பிரிந்த பெருந்  துன்பப் பெருக்கில் வருந்துவார்க்குக்
கணவன்   பெயர்  கேட்டலும்  பேரின்பம்   தரும்   செயல்   ஆகும்.
ஆதலின்.   கணவன்   பெயர்   அனைத்தும்    உரைக்கின்ற    கிளி
மிகப்பேரின்பம்  தருவது  ஒன்று  ஆதலின்.  “கொழுநன்  பேர் எலாம்
உரை    செயும்    கிள்ளையை   உவந்து   புல்லினாள்”    என்றார்.
“ஆவதொன்று  அருளாய்  எனது  ஆவியை.  கூவுகின்றிலை.  கூறலை
சென்று  எனா  பாவை  பேசுவபோல  கண்  பனிப்புறப்  பூவையோடும்
புலம்?புகின்றார்   சிலர்”   (கம்ப:   5007)   என்பதும்   இங்கு  ஒப்பு
நோக்கற்குரியது.                                            27
 

989.

மன்றல் நாறு ஒரு சிறை இருந்து. ஒர் வாணுதல்.
தன் துணைக் கிள்ளையைத் தழீஇ. ‘என் ஆவியை