பக்கம் எண் :

626பால காண்டம்  

இன்றுபோய்க் கொணர்கிலை; என் செய்வாய் எனக்கு?
அன்றிலோடு ஒத்தி’ என்று அழுது. சீறினாள்.
 

மன்றல் நாறு ஒருசிறை இருந்து ஓர் வாள்நுதல்-மணம் வீசும் ஓர்
இடத்திலே   இருந்து  கொண்டு.   ஒளிபெறும்  நெற்றியை  யுடையாள்
ஒருத்தி;   தன்   துணைக்  கிள்ளையைத்   தழீஇ   -   தனக்குத்
துணையாகவுள்ள  கிளியைத்  தழுவி;  என் ஆவியை இன்று போய்க்
கொணர்கிலை  
-  என்  உயிர்  நாயகனை  இன்று  (தூதாகப்) போய்
அழைத்து  வந்தாய்  அல்லை;  என்  செய்வாய்  எனக்கு  -  (இந்த
உதவியைத்  தவிர வேறு) எனக்கு என்ன  உதவி  செய்ய இருக்கிறாய்?;
அன்றிலோடு   ஒத்தி   
- (பிரிந்தாரைத்  தன்  ஒலியால்  வருத்தும்)
அன்றிலைப்  போலவே நீயும் இருக்கிறாய்; என்று அழுது சீறினாள் -
என்று கூறிப் புலம்பி வெகுண்டு கொதித்தாள்.

பிரிந்தாரைச்   சேர்க்கும்  உதவியிலும் பெரிய உதவி உலகில் வேறு
இல்லை.  நீ.  போய்  அவரை  அழைத்து  வாராமல்  அவர்  பெயரை
மட்டும் ஓயாது கூவி என்னை துயர் உறுத்துகிறாய்;  அன்றில்  வெளியே
கூவுகிறது;   நீ   உள்ளே   கூவுகிறாய்.  ஆக.   துயர்   உறுத்துவதில்
இரண்டுபேரும்  ஒன்றே; இடமே வேறுபாடு என்கிறாள்.  மேல் பாடலில்
கிளி   கூவலில்  மகிழ்ந்தாள்.  இப்பாடலில்.   அதுவும்   வெறுத்தாள்.
பிரிந்தார்க்குத் துயர்தரும் பொருள்களுள் அன்றிலும் ஒன்று.         28
 

990.

வளை பயில் முன்கை ஓர் மயில் அனாள்தன்கு
இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும்.
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது கயற்கண் ஆலியே.
 

கொழுநன்  இளையவள்  பெயரினைத்  தனக்கு ஈதலும் - (தன்)
கணவன்.  (தனக்கு)  இளையாளாய் வந்தாள்  பெயரை  (மது மயக்கால்)
தனக்கு இட்டு அழைத்தலும்; வளை பயில் முன்கை மயில் அனாள் -
வளைகள்  நெருங்கிய   கைகளையுடைய   மயில்போன்ற   ஒருத்திக்கு;
முளை  எயிறு  இலங்கிட முறுவல் வந்தது
- (தன் கணவனின் சொற்
சோர்வுகண்டு)  முல்லை  மொக்குகளைப்  போன்ற  பற்கள் ஒளிருமாறு
(முதலில்  அவளுக்குப்)  புன்னகை  வந்தது;  கயற்கண் ஆலி களகள
வென  உதிர்ந்தது  
-  பின்பு.  தன் கணவன்  (இளையாள்மாட்டு தன்
மாட்டுக்  கொண்  டிருப்பதைவிடப்  பேரன்பு  கொண்டு  அவள்  பேர்
மொழிகிறான்  என்னும்  நினைவு  வந்தவுடன்)   அவள்  கயல்போன்ற
கண்களிலிருந்து களகளவென்று கண்ணீர்த் துளிகள் சிந்தின.

கணவன்     அன்பு பங்கிடப் பெறுதலைப் பொறாத காரிகையர் மன
இயல்பு விளக்கியவாறு.  களகள  விரைவும் மிகுதியும் குறித்த இரட்டைக்
கிளவி.  மது  மயக்கால்  விளைந்த  சொற்சோர்?வு  என்ற  நினைப்பில்
முதலில் நகையும். இளை