பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்627

யாள்  மாட்டு  அன்புடையான்  என  அறிந்த  நினைப்பில் அழுகையும்
சேர விளைந்தன.                                           29
 

991.செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல். வெம்மையால்
பற்றலும். அல்குலில் பரந்த மேகலை
அற்று உகு முத்தின் முன்பு. அவனி சேர்ந்தன.
பொன்-தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே.
 

முன்  செற்றம்  புரிந்தது ஓர் செம்மல் - முன்னர்ச் செய்த தவறு
நினைந்த   தலைவன்  ஒருவன்;  வெம்மையால்  அல்குலில்  பரந்த
மேகலை  பற்றலும்  
-  (தன்  மனைவி. தன் அத் தவற்றை நினைந்து
கொண்டுள்ள    ஊடலைத்     தீர்க்கும்)     விருப்பத்தால்.   அவள்
இடைப்பகுதியில் பரவியிருந்த  மேலையைக்  (கையினால்) பிடித்தவுடன்;
அற்று    உகு    முத்தின்    முன்பு  
-   (ஊடல்   நீடி   அவள்
எழத்தொடங்கியதால்)   அம்மேகலையில்  இருந்த முத்துக்கள்  எல்லாம்
அறுந்து  (நிலத்தில்)  வீழும்  முன்பாகவே;  பொற்றொடி ஒருத்திகண்
பொறாத  முத்தம் அவனி சேர்ந்தன
- பொன்னாலான வளையணிந்த
அம்மங்கையின்  கண்களிலிருந்து  (கணவன்  செயலைப்  பொறுக்காமல்
எழுந்த) கண்ணீர் முத்துக்கள் நிலத்தில் வீழ்ந்தன.

பொற்றொடி     - பொன்தொடி.   அணி   முத்து வீழும்முன் கண்
மணிமுத்து வீழ்ந்தன என்று கணவன்  குறை  திருத்தும்  மகளிர் நிறைச்
சிறப்புக்    கூறியவாறு.     இடையிலிருந்து     விழ்வது    முன்னும்.
கண்ணிலிருந்து வீழ்வது பின்னும் (இட  உயர்வு  கருதின்)  வீழ்ந்திருக்க
வேண்டும்.  ஆனால்.  உணர்ச்சியின்  உயர்ச்சியினால்  இடை  முத்தை.
கண் முத்து முந்திக் கொண்டது எனக் கூறுவார்.                  30
 

992.

தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி. ‘தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகு நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ?’ எனப் பலவும் பன்னினாள்.

 

தோடு  அவிழ் கூந்தலாள் ஒருத்தி - மலர் இதழ்கள் மலரப்பெற்ற
கூந்தலையுடையாள் ஒரு  மங்கை;  தோன்றலோடு  ஊடுகெனோ?  -
(பிரிந்துள்ள  என் கணவன்  வரப்பெற்றால்)  அவனோடு நான் (பிரிவுத்
துயர்  தந்ததற்காக) ஊடல் கொள்வேனா; உயிர் உருகும் நோய்கெடக்
கூடு  கெனோ?  
- என் உயிரை உருக்கிக் கொண்டுள்ள காமநோயைத்
தீர்த்துக்   கொள்ள    (உடனே   அவனைக்)  கூடுவேனோ?;  அவன்
குணங்கள் வீணையில் பாடுகெனோ?
- (அவனுக்கு உவகை மிகுமாறு)
அவன்  குணங்களை  வீணையில்   இசைத்துப்   பாடுவேனோ? என்று
பலவும்  பன்னினாள்  -  (அவன்   வந்தவுடன்  செய்ய  வேண்டியவை
எவை  எவை) என்று (இவ்வாறு)  பலவழிகளை  (மனத்துள்)  ஆராய்ந்து
கொண்டிருந்தாள்!