பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்629

கணவனைக்     கூடுவது   கூடுமோ  என அறிய. விழிகளை மூடித்
தரையில்  சுழியிட்டு.  சுழியின்  இருமுனையும்   கூடின்.   கணவனைக்
கூடலாகும் என அறியும் ஒரு பண்டை வழக்கு.  “கூடற்  பெருமானைக்
கூடலார்   கோமானைக்   கூடப்பெறுவேனேல்   கூடு  என்று.  கூடல்
இழைப்பாள்   போல்   கூடல்  இழையாது   இருந்தாள்   பிழைப்பின்
பிழைபாக்கு அறிந்து” (முத்தொள். 31)                         33
 

995.

பந்து அணி விரலினாள் ஒருத்தி. பையுளாள்.
சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள்;
‘வந்தனன்’ என. கடை அடைத்து மாற்றினாள்;
சிந்தனை தெரிந்திலம்; சிவந்த. நாட்டமே.
 

பந்து   அணிவிரலினாள்   ஒருத்தி  பையுளாள் (பந்தாடுகையில்
ஏந்திய)  பந்துக்கு   அழகு  செய்யும்  விரலுடையாள்  ஒருத்தி. பிரிவுத்
துயரம்  உடையவளாய்; சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள் -
கட்டழகில்  ஒப்பற்றவனாகிய   தன்  கணவனிடம்  (தோழியைத்)  தூது
அனுப்பினாள்;  வந்தனன்   எனக்  கடை அடைத்து மாற்றினாள் -
அவன் வந்தானாக வாயிற்கதவை அடைத்துத்(உள்ளே வர இயலாதவாறு)
தடுத்தாள்; சிந்தனை தெரிந்திலம்;  நாட்டம்  சிவந்த  -  (அவளது)
எண்ணம்   இன்னதென  யாம்  அறிய  இயலவில்லை. (அவள்) கண்கள்
(மட்டும்) (வெகுளியால்) சிவந்த வண்ணம் இருந்தன.

‘தூது   வந்தால்  அன்றி. வர இயலாதோ?’ எனக் கணவன் மாட்டுச்
சினத்தாள்  போலும்.  இல்லம்  தன்  சாம்ராச்சியம் ஆதலின் தலைவன்
தன்  மாட்டு  அன்பில்லாத  எதிரி  எனக்கருதி.  மன்னர்  கோட்டைக்
கதவை யடைத்துத் தாழிடல்  போல. தன்  இல்லக்கதவினை  யடைத்துத்
தாழிட்டாள்   என்க.   உண்மை    அன்பு    இல்லையென்று  குற்றம்
சுமத்தியபடி.   நுணுகியுணரவேண்டிய   புலவி   இது   வாதலின்  இது
புலவிநுணுக்கம்.                                            34
 

996.

உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு. ஒருத்திக்கு; அது. அன்பன் தேர்கிலான்;
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்.
‘எத்தனை இறந்தன கடிகை. ஈண்டு?’ என்றாள்.
 

உய்த்த     பூம்பள்ளியின்   ஊடல்   நிங்குவான்  -  (தோழி)
அமைத்திருந்த  மலர்ப்படுக்கையில்.  (தான்   கணவனிடம்   கொண்ட)
ஊடலை முடித்துக்கொள்ள; ஒருத்திக்குச் சித்தம் உண்டு - அவளுக்கு
எண்ணம்  உண்டு;  அது. அன்பன் தேர்கிலன் - அந்த எண்ணத்தை
அவள்  கணவன் அறியாதவனாக இருந்தான்; பொய்த்ததோர் மூரியால்
நிமிர்ந்து போக்கினாள்
- (அப்போது. ஒரு தூக்கம் தூங்கியெழுந்தவள்
போலப்)  பொய்யாகக்   (கைகால்களை   அவன்  மேல் படும்படியாக)ச்
சோம்பல் முறித்தாளாய்; எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள்
-   ‘இப்பொழுது.  எத்தனை   நாழிகைகள்   கழிந்ததுள்ளன?’  என்று
(தூக்கத்தில் அனைத்தும் மறந்தவள் போல்) கேட்டாள்.