பக்கம் எண் :

630பால காண்டம்  

தன்     பெருமையும்   மதிப்பும்  இழவாமல்.  பெண்மை ஊடலை.
முடித்துக்  கொள்ளும் நுட்பம் சுட்டியபடி.  “ஊடல்.  உணர்தல்.  புர்தல்
இவை காமம் கூடியயார் பெற்ற பயன்” (திருக். 1109)  என்பது  வள்ளுவ
வாசகம்.  நீங்குவான் - நீங்க; வினை எச்சம் தூக்கத்தில்  காலம்  உணர
இயலாது    ஆதலின்.   “எத்தனை   இறந்தன    கடிகை?”    என்று
வினாவினாள்.                                              35
 
 

997.விதைத்த மென் காதலின் வித்து. வெஞ் சிறை
இதைப் புனல் நனைத்திட முளைத்ததே என -
பதைத்தனள். ஒருத்தன்மேல். ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும். - பொடித்தன. உரோம ராசியே.
 

ஒருத்தி. பதைத்தனள் ஒருத்தன் மேல் பஞ்சு அடிஉதைத்தலும்-
ஒரு    மங்கை.     (தன்     கணவன்மேல்    கொண்ட   ஊடலால்)
பதைபதைத்தவளாகி.   அவனைத்   தன்   பஞ்சனைய   மெல்லடியால்
உதைத்தவுடன்;  வெஞ்சிறை   இதைப்புனல்  நனைத்திட  -  கடிய
வேலியையுடைய     (உடம்பாகிய)     தினைப்புனத்தில்    (உதையால்
உண்டாகிய  இன்பப் புனல்) நனைத்ததனால்; விதைத்த மென்காதலின்
வித்து  முளைத்ததே  என  
-  விதைக்கப்பட்ட  மெல்லிய காதலாகிய
முளைகள்   (உடனே)  முளைத்து  விட்டதைப்போல;  உரோம  ராசி
பொடித்தன  
-  அவன் உடம்பில்  உள்ள மயிர்க்கூட்டங்கள் சிலிர்த்து
நின்றன.

பிற     விதைகள் காலந்தாழ்த்து முளைக்கும்; காதல் விதை உடனே
முளைக்கும்  எனக்  கூறி   வியந்தவாறு.   அவள்  பாதம் பட்டவுடன்
அவன்   புளகாங்கிதம்   அடைந்தான்;  உரோமஞ்சலி   உண்டாயிற்று
என்பதை   அழகுற   உருவகித்தார்.   உடம்பைக்   கொல்லையாகவும்.
காதலை   வித்தாகவும்.   விதைத்த   இன்பத்தை   நீராகவும்.  உரோம
ராசியைக்  காதல் முளையாகவும் உருவகித்தார்.  ஒருத்தி  பதைத்தனள்;
உதைத்தலும்  இதைப்  புனல்   நனைத்திட.   விதைத்த  மென்காதலின்
வித்து முளைத்தவே யென உரோம ராசி பொடித்தன எனக் கூட்டுக.  36
 

998.பொலிந்த வாள் முகத்தினான்.
   பொங்கி. தன்னையும்
மலிந்த பேர் உவகையால். -
   மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன். ஓர்
   நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கி. - தேன்
   புயங்கள் வீங்கினான்.
 

மாற்றுவேந்தரை  நலிந்த  வாள்  உழவன் - பகை மன்னர்களை
வருத்திய வாட்படையையுடைய வீரன் ஒருவன்; ஓர் நங்கை கொங்கை
போய்   மெலிந்தவா   நோக்கி
- கொங்கைகள்  (தன்  பிரிவினால்)
மெலிந்து போய் இருப்பதைப் பார்த்து; பொங்கி. தன்னையும் மலிந்த