நல்லோர்கள்; ஆட்டுநீர்க்கலசம் என்னல் ஆன - பட்டாபிடேகஞ் செய்ய வைத்துள்ள (புனித) நீர்க்கலசங்களைப் போன்றிருந்தன. இன்ப நாட்டிற்குரிய கலசங்களாதலின் இவ்வாறு கூறினார்; தற்குறிப்பேற்ற அணி. நாடுகாக்கும் போருக்காகப் பிரிந்து. வென்றி வாகை சூடி வரும் தவைனை வரவேற்கப் பூரண கும்பமேந்தி நிற்கின்றாள் என்க. அவன் பெற்ற துன்பம் எல்லாம் நீங்க இன்பநாட்டிற்கு அழைக்கும் பொற்கலசத்தோடு. ‘அந்த நாட்டை அளித்தாய்; இந்த நாட்டினையும் ஏற்பாயாக என்று வரவேற்பது போன்றிருந்தன பொங்கும் கொங்கைப் பொற்குடங்கள் என்பது கருத்து. 39 |