பக்கம் எண் :

648பால காண்டம்  

19. எதிர்கொள் படலம்

தயரத     வேந்தனைச் சனக  மன்னன்  எதிர்கொண்டு வரவேற்கும்
பகுதி.  தயரத  வேந்தன்  தன்  படைக்   கூட்டத்துடன்   கங்கையைக்
கடந்து   மிதிலையை   அடைகிறான்.    சனக    மன்னன்   அவனை
எதிர்கொண்டு  வரவேற்க  வருகின்றான்.   இருபெருஞ்   சேனைகளும்
ஒன்றிக் கலக்கின்றன.  ஞாயிறும்  திங்களுமாகிய இருபெருஞ் சுடர்களும்
ஒன்றுவது  போலத்  தயரதன்   சனகன்   இருவரும்  ஒன்றித்  தழுவி
மகிழ்கின்றனர்.  இராம  இலக்குவர்   பரத   சத்துருக்கன்  தந்தையைத்
தொழுதெழத் தயரதன் பேருவகை  யெய்துகிறான். நால் வேதமே போல்
நால்வரும்  அங்கு  விளங்கினர்.  மக்கட்   செல்வத்தை   வழிநடத்துக
எனும்  தந்தை  ஏவலை ஏற்றுப் படைகளை நடத்தி  இராமன்  மிதிலை
நகர் வீதியினை அடைகிறான்.

மணமுறைகளில்    பெண் இல்லத்தை நோக்கி வந்த மணமகன் தாய்
தந்தையர்.  சுற்றத்தார்  முதலியோரைப்  பெண் வீட்டார் எதிர்கொண்டு
அழைத்து  உபசரித்தலும்.  பின்  மணமகனை  ஊர்வலமாக  அழைத்து
வருதலும்.  பின்  மணமகளைக் கோலஞ் செய்து  மண  மண்டபத்துக்கு
அழைத்து  வருதலும்.  மணமக்கள்  ஒருவரையொருவர்  பார்த்த  பிறகு.
திருமண  நாள்  நிச்சயித்தலும்.  பின்பு  நிச்சயித்த  நாளில்  திருமணம்
இனிதே  நிகழ்ந்தேறலும்  இன்றும் உள்ள  மரபு.  இம் மரபே. அன்றும்
இருந்தது   என்பது   எதிர்கொள்   படலம்.    உலாவியல்    படலம்.
கோலங்காண்  படலம். கடிமணப் படலம்.  ஆகிய  படலங்களின் முறை
வைப்பால் இனிதே உணரலாம்.

     தசரதன் படைகளுடன் கங்கைக் கரையடைதலும் மிதிலை சேரலும்

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

1029.அடா நெறி அறைதல்செல்லா
   அரு மறை அறைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செங்கோல்
   வெண்குடை வேந்தர் வேந்தன்.
படா முக மலையில் தோன்றிப்
   பருவம் ஒத்து அருவி பல்கும்
கடா நிறை ஆறு பாயும்
   கடலொடும். கங்கை சேர்ந்தான்.

 

அருமறை அடா நெறி  யறைதல்செல்லா  -  செல்லத்  தகாதவை
யென்று அரிய மறைகள் சொன்ன நெறிகளில் செல்லாது; நீதி