பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்651

வந்தனன்     அரசன் என்ன- தசரத மன்னன்  வந்தனன் என்ற
(செய்தி  கேட்ட  சனக  மன்னன்); மனத்து எழும் உவகை பொங்க -
தன்   உள்ளத்தில்   எழுந்த   உவகை.   உடலில்    (மெய்ப்பாடாய்)
பெருகாநிற்க;  கந்து அடுகளிறும் தேரும் கலினமாக் கடலும் சூழ -
கட்டுத்  தறிகளை முறிக்கவல்ல ஆண்யானைகளும்.   தேர்ப்படைகளும்.
கடிவாளம்  இட்ட குதிரைகளும் ஆகிய சேனைகள்  சமுத்திரம்  போல்
தன்னைச் சுற்றிவர;  சந்திரன் இரவிதன்னைச்  சார்வதோர் தன்மை
தோன்ற  
-  சந்திரன்  சூரியனை வந்தடைகின்ற தன்மையினை  ஒப்ப;
இந்திர திருவன் தன்னை எதிர்  கொள்வான்  எழுந்து வந்தான்
-
தேவேந்திர       உலகத்தின்       செல்வங்களைப்        போன்ற
செல்வங்களையுடைய    தசரதனை.    எதிர்கொண்டு      அழைக்கும்
பொருட்டுப் புறப்பட்டு வந்தான்.

சூரிய     குலததுத் தசரதனை. சந்திர குலத்துச்  சனகன் வரவேற்க
வருகின்றான்   ஆதலின்.   “சந்திரன்   இரவிதன்னைச்   சார்வதோர்
தன்மை  தோன்ற”  என  அழகுறக்  கூறினார்.  தசரதனை  “இந்திரன்
என” (கம்ப. 318) முன்னும் உவமிப்பார்.                         4
 

1033.கங்கை நீர் நாடன் சேனை.
   மற்று உள கடல்கள் எல்லாம்
சங்கு இனம் ஆர்ப்ப வந்து
   சார்வன போல. சார.
பங்கயத்து அணங்கைத் தந்த
   பாற்கடல் எதிர்வதேபோல்.
மங்கையைப் பயந்த மன்னன்
   வள நகர் வந்தது அன்றே.
 
  

மற்று   உள கடல்கள் எல்லாம்- (பாற் கடலைத் தவிர) மற்றைய
கடல்கள் யாவும்; சங்கு இனம்  ஆர்ப்பவந்து  சார்வன  போல  -
சங்குகளின்    கூட்டம்    ஆரவாரம்   செய்த    வண்ணம்   வந்து.
(திருப்பாற்கடலை)  சேர்வன போன்று; கங்கைநீர் நாடன் சேனை சார
-   கங்கைபாயும்  கோசல  நாட்டுத்  தசரத   மன்னனது   சேனைகள்
மிதிலை  வந்து சேர; மங்கையைப்  பயந்த  மன்னன்  வளநகர்  -
சீதையை  மகளாகப்  பெற்ற  சனக  மன்னனது வளம் மிக்க   மிதிலை
நகர்; பங்கயத்து அணங்கைத் தந்த  பாற்கடல் எதிர்வதேபோல் -
தாமரை  மலரில் வதியும் திருமகளைத் தந்த திருப்பாற்கடலானது (பிற
கடல்களை)  எதிர்கொண்டு  வர வேற்பது போன்று; அன்று வந்தது -
அப்பொழுது. தசரத சேனையினை எதிர்கொண்டு வரவேற்றது.

சீதை     திருமகளின் கூறு ஆதலால் அவள் தோன்றிய  திருப்பாற்
கடலைச் சீதை இப்போது தோன்றியுள்ள மிதிலைக்குப்  பொருத்த   முற
உவமித்தார்.   தசரத   சேனையைப்    பிறகடல்கள்    அனைத்துமாக
உவமித்தலால்  அதன்  பெருக்கம் தெரிவித்தார்.  சங்கங்கள்   முழங்கச்
சேனை எதிர் வருவது. சங்குகள் முழங்கும்