பக்கம் எண் :

  எதிர்கொள் படலம்653

தொங்கல்   வெண்குடை தொகைப்பிச்சம்  உட்பட  விராய் -
மாலைகளையுடைய  வெண் கொற்றக் குடைகளும்.  தொகுதியான  மயிற்
பீலிக்  குஞ்சங்களும் உட்பட (தாமரை. கொடி.  மகரதோரணம்  முதலிய
அரச  சின்னங்கள்)  கலந்து;  எங்கும்  விண்புதைதர  -  (அதனால்)
எவ்விடத்தும்  ஆகாயம்  மறைவதனால்; பகல் மறைந்து இருள் எழ -
சூரியன்   ஒளி   மறைந்து  இருள்  உண்டாக;  பங்கயம்  செய்யவும்
வெளியவும்  
- தாமரை மலர்கள் செம்மையாகவும்.  வெண்மையாகவும்;
பலபடத்தங்கு  தாமரையுடைத்தானமே  போலும்  
-  பலப்பலவாகத்
தோன்றும் தாமரைத் தடாகத்தையே அச் சேனை ஒத்திருந்தது.

வானம்     முழுவதும் அரச சின்னங்கள் மறைப்பதாகக்   கற்பித்து.
அதன்  பின்னும்  கற்பனைக் கண்ணைச் செலுத்தி  பகலை   இரவாக்கி.
உலகைத்   தாமரைத்   தடாகமாகக்   கொண்டு   மகிழும்  கவிஞரின்
கற்பனைத்  திறம் நினைக்க  இனிக்கவல்லது.  சேனையில்  வெண்ணிறக்
குடைகளும்.   அவற்றில்   செந்நிறமாகத்   தொங்கும்    குஞ்சங்களும்
நிறைந்த  காட்சி  வெண்டாமரையும்  செந்தாமரையும் கலந்து   மலரும்
தாமரைக்  குளம்  போன்றிருந்தது  என்பதாம்.  குடைகளால்  கதிரவன்
மறைந்து பகல் இருளாவதை மேலும் (கம்ப. 786. 8411) குறிப்பர்.      7
 

1036.கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்
படி உளாளோ? கடற் படை உளாளோ? பகர்
மடி இலா அரசினான் மார்பு உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம் - முளரியாள்.

 
  

முளரியாள்     - செந்தாமரை மலரில்   வதியும்  திருமகள்;  பகர்
மடிஇலா  அரசினான்  
-  (புகழ்ந்து)  கூறப்படுகிற சோம்பல் இல்லாத
அரசாட்சி   செய்யும்  தசரத  மன்னனுடைய;  கொடி  உளாளோ  -
கொடியில்  உள்ளாளோ?; தனிக் குடை உளாளோ? - ஒப்பற்ற வெண்
கொற்றக்   குடையிலே  இருக்கின்றாளோ;   குலப்படி  உளாளோ -
பரம்பரை    பரம்பரையாக   வருகின்ற   அவனது     இராச்சியத்தில்
இருக்கின்றாளோ;  கடல்  படை உளாளோ? - கடல் போன்ற அவன்
சேனையிலே  இருக்கின்றாளோ?;  மார்பு  உளாளோ? - அம் மன்னர்
மன்னனின் மார்பிடத்தே இருக்கின்றாளோ?; வளர் முடி உளாளோ? -
அழகு  வளரும்  அவன் மணிமகுடத்தில் இருக்கின்றாளோ?;  தெரிந்து
உணர்கிலாம்
- திருமகள்  இருக்குமிடம் இன்னது எனத் தெளிந்தறியக்
கூடவில்லை.

மன்னர்களிடம்    திருமகள் வாசம்  புரியத்தக்க இவையனைத்திலும்
ஏதோ  ஓரிடத்தில்  வசிப்பது  அவள்  வழக்கம்; தரசதன்  ஆட்சியில்
அவள்   அனைத்திலும்  உள்ளாள்  என்றவாறு.   “மடியிலான்   தாள்
உளாள் தாமரையினாள்” (திருக். 617) எனும்  அருமைத்   திருக்குறளின்
கவிதை விளக்க வுரையாவது இது.                              8