களைவு அருந்துயர் அறக் ககனம் எண்திசை எலாம்- (பிறரால்) நீக்குதற்கு அரிய (சம்பரன் முதலிய அசுரர்களால் உலகோர்க்கு நேர்ந்த) துயரங்களையெல்லாம். நீக்கியதால் விண்ணிலும் எண்திசைகளிலும். பிறஎல்லா இடங்களிலும்; விளைதரும் புகழினான் எவரினும் மிகுதியான் - பரவிய புகழினையுடையவனும். எல்லோரினும் சிறந்தவனுமான தசரதன்; இளைய பைங்குரிசில் வந்து அடிபணிந்து எழுதலும் - பசும்பொன்னின் நிறம் வாய்ந்த இளைய பெருமாள் வந்து (தன்னுடைய) திருவடிகளை வணங்கி எழுந்த அளவிலே; தளைவரும் தொடையல் மார்புற உறத்தழுவினான் - கட்டப்பட்ட மாலைகள் நிறையும் மார்பில் பொருந்துமாறு. நன்கு அணைத்துக்கொண்டான். இராமனாகிய மூத்தோனைக் காக்கத் தானாகப் பின்சென்ற தகுதியோன் ஆதலால். இலக்குவனை “மார்புற. உறத்தழுவினான்” என்க. தசரதன். “துனி இன்றி உயிர் செல்ல. சுடர் ஆழிப்படை வெய்யோன் பனி வென்றபடி என்ன. பகைவென்று படி காப்போன்” (கம்ப. 650) ஆதலால். “களைவரும் துயர் அறக் ககனம் எண்திசை எலாம் விளைதரும் புகழினான்” என்றார். பரம்பொருளாகிய இராமனை ஈன்றதால் “எவரினும் புகழினோன்” ஆனான். இலக்குவன் பொன்னிறத்தன் என்பதனை. “வில் ஏந்தும் எனில் செம்பொன் பருவரை” (கம்ப. 658) என்பதனால் உணர்க. கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர் (திருக். 550) ஆதலால் “களைவரும் துயர்அற” நாடாண்டான் எனினுமாம். 24 இராமன் தாயாரை வணங்குதல் |