கரிகளைப் பொருவினார் - யானைகளைப் போன்ற அப்படை வீரர்களுடைய; காதலோ அறிகிலம் - (அரச குமாரர்களிடத்து வைத்துள்ள) அன்பின் மிகுதியோ (இவ்வளவென்று) எம்மால் அறியமுடியாததாய் உள்ளது; தீது இலா உவகையும் சிறிதரோ? பெரிதரோ? - (அவர்கட்கு அப்போது உண்டான) மாசற்ற மகிழ்ச்சிப் பெருக்கு குறுகிய காலத்ததா? நீண்ட காலத்ததா? (அறியோம்.); கோதை சூழ் குஞ்சிக் குமரர் வந்து எய்தலும் - மாலைகளைச் சூடிய மயிர் முடியோடு காணப்பெறும் அரசகுமாரர்கள் வந்து அடைந்த அளவிலே; அத்தானையின் தன்மை தாதை யோடு ஒத்தது - அந்தப் படையின் இயல்பு (இராம இலக்குவர்களைக் கண்ட) தந்தையாகிய தசரதன் இயல்போடு சமமாகியது. அரோ - அசைகள்: “தாதையோடு ஒத்தது” என்றதனால். தசரதன் அடைந்த பேருவகையினைப் படைகளும் அடைந்தன என்றார். எனவே. இராம இலக்குவர் அத்தனை பேர்க்கும் மக்களாயினர்; அத்தனை பேரும் இராம இலக்குவர்க்குத் தந்தையர் ஆயினர் என்பது கருத்தாகக் கொள்க. 30 இராமனும் தம்பியரும் சென்ற காட்சி |