பக்கம் எண் :

668பால காண்டம்  

தழுவு சங்குடன் நெடும்
   பணை தழங்கிட. எழுந்து.
எழுத அருந் தகையது ஓர்
   தேரின்மேல் ஏகினான்.
 

இரண்டு அருகும் அன்புடைய தம்பியர்  தொழுது தொடர்ந்து-
(தனது)  இருமருங்கிலும்  அன்புடைய  தம்பியர்  மூவரும்    வணங்கி
தொடர்ந்து; அழிவில் சிந்தையின்  உவந்து ஆடல் மா மிசை வர-
(என்றும்   தமையன்   மாட்டு)  நிலைத்த  அன்புடைய    மனத்திலே
பெருமகிழ்ச்சி    கொண்டவராய்    வெற்றிக்      குதிரைகளின்மேலே
ஏறிவரவும்; தழுவு சங்குடன்  நெடும்பணை  தழங்கிட - (கைகளால்)
தழுவி  (வாயில்) வைத்து ஊதப்படுகிற   பெரிய  சங்கவாத்தியங்களுடன்
பெரிய   பேரிகைகள்  முழங்கவும்;  எழுந்து  எழுதருந்தகையது  ஓர்
தேரின்மேல்  ஏகினான்  
-  (இராமபிரான்)  புறப்பட்டு. ஓவியத்தாலும்
எழுதுதற்கரிய அழகுடையதொரு தேரின்மேல் (ஏறிச்) சென்றான்.

இராமன்     மாட்டுத் தம்பியர் வைத்துள்ள   அழியா    அன்பின்
ஆழத்தையும்    கனத்தையும்   முதல்     இரண்டடிகளிலும்    சொல்
ஓவியப்படுத்தியுள்ளமை  காண்க.  மெய்காப்பார்   பணியினை  இராமன்
மாட்டுள்ள  அன்பின்  மிகுதியால்  தம்பியரே  ஏற்று.     இருமருங்கும்
புடைசூழவந்தனர்  என்க.  இத்தகைய  பவனிக்கெனப்   பயிற்றப்  பட்ட
ஆடும்  பரிகள் இருந்தன என்பது. “ஆடல்மா பிசைவர”   என்பதனால்
பெற்றாம்.                                                 31

                           மிதிலை நகர வீதிக்கு இராமன் வருகை
 

1060.பஞ்சி சூழ் மெல் அடிப்
   பாவைமார் பண்ணைசூழ்.
மஞ்சு சூழ் நெடிய
   மாளிகையின் வந்து. இடை விராய்.
நஞ்சு சூழ் விழிகள் பூ
   மழையின் மேல் விழ நடந்து.
இஞ்சி சூழ் மிதிலை மா
   வீதி சென்று எய்தினான்.
 

பஞ்சி சூழ்மெல்லடிப் பாவைமார் பண்ணை- செம்பஞ்சுக் குழம்பு
ஊட்டப்பட்ட     மென்மையான     பாதங்களையுடைய      சித்திரப்
பாவையினையொத்த   மகளிரின்   கூட்டம்;   சூழ்  மஞ்சுசூழ்நெடிய
மாளிகையின் வந்து  இடைவிராய்
- (வானில்) சுற்றியுள்ள மேகங்கள்.
நீண்ட  மாளிகையில்  வந்து தங்குமாறு உயர்ந்த   (மாடங்களையுடைய)
மாளிகைகளிலிருந்து  (வெளி)  யிடங்களில்  வந்து (மகளிரோடு மகளிர்)
கலந்து  நிற்க;  நஞ்சுசூழ்  விழிகள்  -  நஞ்சு  போன்ற அவர்களின்
கண்கள்;  பூமழையின்  மேல்விழ  நடந்து  - மலர் மாரிபோல் (தன்)
மேலே