20.உலாவியற் படலம் இராமன் தேர் ஏறி வீதி உலா வருவதைக் கூறும் பகுதி. இராமனைக் கண்டு மகிழ மிதிலை நரகத்து மகளிர் மொய்க்கின்றனர். பெண்களாய்ப் பிறந்ததன் பயன் எய்த முந்துவார்போல் பல பருவ மகளிரும் ஆன்ம நாயகனைக் கண்டு களிக்க முந்தினர். யாவர் கண்களிலும் இராமனே இருந்தான். மகளிர் நெருக்கத்தால் உதிர்ந்த பொன்னும் மணிகளுமாய் வீதிகள் மின்னின. இராமன் வடிவினை முழுதும் கண்டார் யாவரும் இலர்;சீதை பெற்ற தவப் பயனை எண்ணி எண்ணி மகளிர் வியந்தார்கள். இத்தனை மகளிர் விழியம்புகளையும் ஏறெடுத்தும் நோக்காது. இராமன். மண்டபம் அடைந்து விசுவாமித்திரன் ஏவிய ஆதனத்து அமர்ந்தான். அறஞ்செய் காவற்கு அயோத்தியில் தோன்றிய இராமனின் தந்தை தயரதனும் மண்டபம் அடைந்தான். மகளிர் பல்லாண்டிசை பாடினர். அனைவரும் சனக மன்னனின் அன்பினில் திளைத்தனர். இராமனைக் காண வந்த மகளிரின் தன்மை |