பக்கம் எண் :

  உலாவியற் படலம்673

நீங்குமின்    நீங்குமின்   என்று- நெருங்கிய   வாறே   நுழைந்து
வழிவிடுங்கள்.  வழிவிடுங்கள்  என்று  கூறிய  வண்ணமே;  தேன்நுகர்
அளியின்  மொய்த்தார்
- தேன்பருகத் துடிக்கும் வண்டுகளைப்போல.
(இராமபி ரானை) மொய்த்தனர்.

“செவிக்குத்தேனா”கிய  (கம்ப.   4966)   இராமபிரான் கண்ணுக்கும்
தேனானான்;காணவந்த மகளிர் உண்ண வந்த வண்டானார் என்க.

இராமன்     அழகெனும்   தேனைப்பருக வந்த மகளிர். ஒருவர்க்கு
ஒருவர்  இடித்துக்கொண்டு  நெருக்கியவாறு   முந்துதலால்.  கூந்தல்கள்
சரிந்தன;  மேகலைகள்  அற்றன;   மெல்லிடைகள் நெளிந்தன என்றார்.
உள்ளம்   ஒன்றில்   தோய்ந்து  விட்டால்.   உடலும்  உடல்  சார்ந்த
பொருள்களும்  ஒரு  பொருட்டாகக் கவனம்   பெறுவதில்லை என்னும்
உளவியல்   தத்துவத்தை.  இராமன்கோலம்   காண  வந்த  மகளிரின்
அலங்கோலம் கொண்டு விளக்கியுள்ள திறம் காண்க.               2
 

1065.பள்ளத்துப் பாயும் நல் நீர்
   அனையவர். பானல் பூத்த
வெள்ளத்துப் பெரிய கண்ணார்.
   மென் சிலம்பு அலம்ப. மென் பூத்
தள்ள. தம் இடைகள் நோவ.
   தமை வலித்து. ‘அவன்பால் செல்லும்
உள்ளத்தைப் பிடித்தும் நாம்’ என்று.
   ஓடுகின்றாரும் ஒத்தார்.
 

பள்ளத்துப் பாயும் நன்னீர் அனையர் - பள்ளம் நோக்கிப் பாயும்
(தன்மையுடைய)  நல்ல நீரின் தன்மையுடையவர்களாய்;   வெள்ளத்துப்
பானல்  பூத்த பெரிய கண்ணார்
- நீர் ஓடையில் பூத்த கருங்குவளை
மலர்களிலும்     பெரிய      கண்களையுடையவர்களாகிய    மகளிர்;
மென்சிலம்பு அலம்ப. மென்பூத் துள்ள  தம்  இடைகள்  நோவ
-
மெல்லிய  சிலம்புகள்  ஒலிக்கவும்.  மெல்லிய மலர்கள் சரியவும்.   தம்
மெல்லிய  இடைகள் வருந்தவும்; தமைவலித்து அவன் பால் செல்லும்
-  தம்மை  (பின்னே  வர)  இழுத்துக்கொண்டு  அவனிடத்து    (முன்)
செல்கின்ற;  உள்ளத்தை  நாம்  பிடித்தும் என்று - (தமது) மனத்தை
நாம்  (ஓடிப்போய்ப்) பிடிக்க வேண்டும் என்று; ஓடுகின்றாரும் ஒத்தார்
- ஓடுகின்றவர்களையும் போன்று (மனோ வேகத்தில்) விரைந்தனர்.

பெரும்     பள்ளமாகிய கடலில் போய்ச் சேர்ந்தபின்.  இயக்கத்தை
நிறுத்தித்     தனித்தன்மை    நீங்கி     விடும்     நதிகளைப்போல.
உயிர்கள்யாவும்  இறைவனிடத்தில்  சென்று   அடங்கும்    தன்மையன
என்னும் தத்துவக் கருத்தினை அடியிற் காண்க.

வெள்ளம்     பள்ளம் பாயும் இயல்பினது ஆதலின் “பள்ளத்துப்
பாயும்  நல் நீர்” என்றார். இன்பத்தைப் பள்ளமடை என்னும் வழக்கு
உண்மையின்.