பக்கம் எண் :

  உலாவியற் படலம்677

றது’  என்று கூறி; பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுங்காலை
-  (அந்நகரத்துப்)  பெண்டிர்  (கண்ணிலிருந்து இராமன்   மறைவதற்கு)
தங்களுக்குள்   வருந்தி.   மதிமயங்கும்போது;   மண்கடந்து  அமரர்
வைகும்  வான்  கடந்தானை  
- (முன்பு திருவித்கிரம அவதாரத்தில்)
மண்ணை  ஓரடியால்  அளந்துவிட்டு.   வானையும்  ஓரடியால் அளந்து
மூன்றாம்  அடிக்கு  இடம்கேட்டவனான  அந்த  இராமனை;   தன்தன்
கண்  கடவாது காத்த  காரிகை  
-  தான்.  தனது  கண்களை விட்டு
நீங்கவிடாமல் பாதுகாத்துக்கொள்ள இருக்கிற சீதை; பெரியளே காண் -
எல்லாரினும் பெரியவளே ஆவாள்! (என்றனர்).

ஓங்கி     உலகளந்த பெரியரிற் பெரியனானவனை. தன்  கண்களில்
அடக்கிக்  காப்பவளாகிய  சானகி.   அவனிலும்   பெரியவளே  என்று
கவிஞர்பிரான்.  சமற்காரம்   தோன்ற   வியந்தவாறு.  காண்  - அசை.
உலகளந்த.  தன்  காதற்  கொழுநனைத் தன் கண்வட்டத்தில் வைத்துக்
காக்கும்  வாய்ப்பினைப்  பெற்றுவிட்ட   சீதையின்   பெரும்பேற்றினை
எண்ணிப் பெண்மைக்குரிய வியப்புணர்வோடு பெருமூச்செறிந்தவாறு.   7
 

1070.பயிர் ஒன்று கலையும். சங்கும்.
   பழிப்ப அரு நலனும். பண்பும்.
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும்.
   சிந்தையும். உணர்வும். தேசும்.
வயிரம் செய் பூணும். நாணும்.
   மடனும். தன் நிறையும். மற்றும்
உயிர் ஒன்றும். ஒழிய எல்லாம்
   உகுத்து. ஒரு தெரிவை நின்றாள்.
 

ஒரு  தெரிவை - (வேட்கை பிறந்த பருவமாகிய) தெரிவைப் பருவம்
உடையாள்  ஒருத்தி; தன்பயிர்  ஒன்று  கலையும் சங்கும். பழிப்பறு
நலனும்  பண்பும்
- தனது பயிர்ப்பு என்னும் குணத்தையும்.  உடலைப்
பிரியாது  இணைந்திருந்த  ஆடையையும்.   சங்க   வளையல்களையும்.
பழித்தற்கியலாத    நற்செயல்களையும்.     இயற்கை     இயல்பையும்;
செயிர்இன்றி அலர்ந்த பொற்பும்  சிந்தையும்  உணர்வும் தேசும்
-
குற்றமற்று  மிக்கு  விளங்கும்  அழகையும்.  மனத்தையும்.  அறிவையும்.
ஒளியையும்; வயிரம் செய்  பூணும்.  நாணும். மடனும் தன்நிறையும்
மற்றும்  
-  வயிரங்கள்  பதித்த   நகைகளையும். நாணத்தையும் மடம்
எனும்  பெண்மைக் குணத்தையும். மன  அடக்கத்தையும்.   மற்றுமுள்ள
பெண்மைக்குரிய  இயல்புகளையும்; உயிர்  ஒன்றும்  ஒழிய எல்லாம்
உகுத்து  ஒரு  தெரிவை   நின்றாள்   
-   உயிர்   ஒன்றைத்தவிர.
எல்லாவற்றையும்    சிந்தவிட்டு    (இராமன்    சென்றுவிட்டதனால்
செய்வதறியாது) நின்றாள்.