பக்கம் எண் :

  கோலம் காண் படலம்705

21. கோலம் காண் படலம்
 

சீதைக்குத்   தோழியர் மணக்கோலஞ்செய்து கண்டு மகிழ்வது கூறம்
பகுதி.  மணமண்டபத்திற்குச் சீதையை  அழைத்து வருமாறு  வசிட்டன்
சனகனை    வேண்டினன்.    சனகன்     தாதியர்க்கு     அச்செய்தி
தெரிவித்தான்.  சீதைக்குத்  தாதியர்  அமிழ்தினைச்   சுவை  செய்வது
போல்  அழகினுக்கு  அழகு செய்து பாதாதிகேசமாக  அணிகள் பூட்டி.
மணமண்டபத்திற்கு    அழைத்து   வந்தனர்.    தசரதனும்   முனிவர்
இருவரும்    தவிர.    அத்தனை   பேர்   கரங்களும்    சீதையைத்
தெய்வமெனக்  கருதிச் சிரமேல் குவிந்தன.  கன்னிமாடத்தருகே  கண்ட
காதற்  காட்சிக்குரியவரே  என இராமனும் சீதையும் ஒருவரை  ஒருவர்
அறிந்து   ஐயம்  நீங்கி  அகம்  பூரித்தனர்.  திருமணநாள்   ‘நாளை’
எனக்குறித்த    பிறகு    தத்தம்    இருப்பிடங்களை    அனைவரும்
அடைந்தனர்.
 

          சீதையைக் கொணருமாறு வசிட்டன் சனகனுக்குக் கூறுதல்
 

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 

1117. 
 

தேவியர் மருங்கு சூழ.
   இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்றென்ன
   உவந்து. அரசு இருந்தகாலை.
தா இல் வெண் கவிகைச் செங்கோல்
   சனகனை இனிது நோக்கி.
‘மா இயல் நோக்கினாளைக்
   கொணர்க!’ என. வசிட்டன் சொன்னான்.
 

ஓவியம்  உயிர்பெற்று என்ன - சித்திர வடிவங்கள்  உயிர்பெற்று
இயங்குவது  போன்ற; தேவியர் மருங்கு சூழ -  தம்  மனைவியர்கள்
தன்  அருகே  சூழ்ந்திருக்க; இருக்கை சேர்ந்த இந்திரன் -  (என்ன)
அரசு  உவந்து  இருந்த  காலை   -  ஆசனத்தில்   அமர்ந்துள்ள
தேவேந்திரன்  என்னுமாறு  தசரத வேந்தன்  (அம்மணி  மண்டபத்துச்
சிங்காதனத்தில்)  மகிழ்ச்சிபொங்க வீற்றிருக்கும் போது; வசிட்டன்  தா
இல்வெண்கவிகைச்செங்கோல் சனகனை இனிது நோக்கி
- (அவன்
குலகுருவாகிய)  வசிட்ட மாமுனி. குற்றமற்ற வெண்கொற்றக்  குடையும்.
செங்