திருமணத்திற்குப் பொருந்திய நாள் நாளையாகும் என்று நல்லதவம் மிகுந்த விசுவாமித்திர முனிவன் உரைத்தான். 41 |
தரசதன் முதலியோர் இருப்பிடம் செல்லலும் கதிரவன் மறைதலும் |
1158. | சொற்ற பொழுதத்து. அரசர் கைதொழுது எழ. தன் ஒற்றை வயிரச் சுரி கொள் சங்கின் ஒலி பொங்க. பொன்-தடமுடிப் புது வெயில் பொழிதர. போய். நல் தவர் அனுச்சை கொடு. நல் மனை புகுந்தான். |
சொற்ற பொழுதந்து- (இங்ஙனம் கோசிக முனிவன்) கூறிய பொழுதில்; அரசர் கைதொழுது எழ - (தசரதன்) மற்றையரசர் எல்லோரும் தன்னைக் கைகூப்பி அஞ்சலி செய்து எழவும்; தன் ஒற்றை வயிரச் சுரிகொள் சங்கின் ஒலிபொங்க - தனக்கு உரிய ஒப்பற்ற வயிரப் பூண் அணிந்த. உள்சுழிகின்ற (வெற்றிச்) சங்கின் ஒலி பொங்கியெழவும்; பொற்றடமுடிப் புது வெயில் பொழிதரப் போய் - பொன்னாலான (தன்) அகன்ற மணிமகுடம் இளவெயில் வீசச்சென்று; நல்தவர் அனுச்சைகொடு நல்மனை புகுந்தான் -சிறந்த முனிவர்களின் இசைவைப் பெற்றுக்கொண்டு (தனக்குரிய) சிறந்த மாளிகைக்குச் சென்றடைந்தான். |
நில அரசர்கள் எழுந்து நின்று விடைதர. தவஅரசர்களைப் பணிந்து நின்று அனுமதி வேண்டி விடைபெற்றான் எனக் கூறி. தசரதனின் வீரமும் அருளின் ஈரமும் தோற்றுவித்த திறம் உணர்க. அனுச்சை - அநுமதி. இசைவு. 42 |
1159. | அன்னம் அரிதின் பிரிய. அண்ணலும் அகன்று. ஓர் பொன்னின் நெடு மாட வரை புக்கனன்; மணிப்பூண் மன்னவர் பிரிந்தனர்கள்; மா தவர்கள் போனார்; மின்னு சுடர் ஆதவனும். மேருவில் மறைந்தான். |