பக்கம் எண் :

742பால காண்டம்  

உமையாக்கினாள்.   இராமனைக் “கைவளை திருத்துபு கடைக்கணின்
உணர்ந்த”  காலந்தொட்டு. அவள் நெஞ்சு அவளைத் துறந்து  இராமன்
திருவடியைத்   தொடர்ந்து   சுற்றிதிரிவதாயிற்று.  இதனால்.   இராமன்
திருவடியழகு.     சீதை     நெஞ்சிற்பதிந்து    நின்ற     நிலையைக்
கவிச்சுவையொடு கவிஞர்பிரான் அறிவித்தவாறு. நான்   தோன்றிய நாள்
தொட்டு என்னோடிருந்த நீ. இடையே ஒரு நாள்  அவரைக்கண்டவுடன்
என்னைக்  காணாது  அவரோடு  ஏகினாயே!   என்று இரங்குகின்றாள்.
நாளை    அவர்    என்னருகில்    வருவார்.     அவர்     காலைச்
சுற்றிக்கொண்டிருக்கிற  நீ.  அப்போது  என்னிடம்  வந்து தானே ஆக
வேண்டும்   என்பாள்.   “வரு  நாள்  அயலே   வருவாய்  மனனே!”
என்றாள்.  ஆக்கப்பொறுத்தும் ஆறப்பொறாதது போல்.   இன்னும் ஒரு
நாள் பொறாமல் அவர் உடன் ஓடிவிட்ட உன்னைப்போல்  யாருளார்?”
ஒரு  நாள்  தரியாது  ஒழிவார் உளரோ?” என்றாள். “மண்வழி  நடந்து
அடி  வருந்தப் போனவன்” (கம்ப. 535) எனவும். “நடந்தது    கிடந்தது
என் உள்ளம் நண்ணியே” (கம்ப. 537) எனவும் பிராட்டி.   பெருமானின்
திருவடிக்கும் நடைக்கும் மனம் பறிகொடுத்ததை முன்பும் கூறினார்.    4
 

                                           அன்றிலொடு கூறல்
 

1164.‘கனை ஏழ் கடல்போல். கரு நாழிகைதான்.
வினையேன் வினையால் விடியாவிடின். நீ
தனியே பறவாய்; தகவு ஏதும் இலாய்-
பனைமேல் உறைவாய்! - பழி பூணுதியோ?

 

பனைமேல் உறைவாய்- பனைமரத்தின் மேல் தங்குகின்ற அன்றில்
பறவையே!;  கனை  ஏழ்கடல்போல்  -  ஒலியெழுப்பும்  எழுகடலைப்
போல;  கரு  நாழிகை   -   இரவு;   வினையேன்  வினையால் -
இராமனையடைய   முயலும்    அடியேனின்    (தீ)   வினைப்பயனால்;
விடியாவிடின்
-  விடியாமல்  போய்விட்டால்;  தகவேதும்  இலாய் -
(தனித்திருப்போரைச் சோடியாகச்சென்று  வருத்துதல்  கூடாது  என்னும்)
பண்பாடு  சிறிதும்  இன்றி;  தனியே  பறவாய்  -  தனித்துப்பறவாமல்
உன்துணையோடு    பறக்கின்றாய்!;    பழிபூணுதியோ?    -    ஏன்
(துணையற்றாரைத்              துன்புறுத்தும்            இத்தகைய)
பழிச்செயல்களை(த்துணிந்து) மேற்கொள்கின்றாய்?.

கரு     நாழிகை  -  அன்மொழித்தொகையாய்  இரவைக் குறித்தது.
தனித்திருக்கும்     காதலர்க்கு.   இணைந்திருப்பார்   காட்சி    மிகத்
துன்புறுத்தும்  ஒன்றாதலின்.  தனியே  பறவாய்   (இணைந்து   பறந்து)
பழிபூணுதியோ என்றாள்.

நிலவு.     இரவு. தென்றல்.  அன்றில். கடல்  முதலிய  பொருள்கள்
காமத்தை    மிகுவிக்கும்    பொருள்கள்    ஆதலால்     அவற்றைக்
“காமோத்தீபகம்”   என்பர்.   பின்   வரும்   பாடல்களில்     அவை
பேசப்படுதல் காணலாம். கரு நாழிகை - கரிய  நேரம் - இருள்.  “கரும்
பொழுது  அகலும்  முன்னே  கொல்லுதல்  கருமம் என்றான்”  (வில்லி.
கிருட்.  தூ.17)  என வருதல் காண்க. பிரிந்திருப்பார்க்கு  இரவு  எல்லை
காணாத  ஒன்றாய்  நீளுதலின்  எல்லை   காணாக்கடலை  உவமித்தார்.
அதுவும்  ஒரு  கடல் அன்று என்பார். “கனை ஏழ் கடல்”  போல்  கரு
நாழிகை  என்றார்.  அன்றில் காதல்  அன்பிற்குப்  புகழ்பெற்ற  பறவை.
“அன்றில்  ஒரு  கண்  துயின்று.  ஒரு கண்  ஆர்வத்தால்  இன்றுணை
மேல் வைத்து உறங்கும்” (நள. வெ. சுயம். 117) காதலர்.  (பனை)  மடல்
ஏறுதல்  பழிப்புக்குரிய  செயல்  எனும்  மரபும் தொனிக்க. “பனைமேல்
உறைவாய் பழி பூணுதியோ?” என்றுரைத்த நயம் காண்க.            5