பக்கம் எண் :

796பால காண்டம்  

பெண்கள் இனிப் பிறர் யார் உளர்?’ என்றார்;
கண்கள் களிப்ப. மனங்கள் களிப்பார்.

 

சங்க     வளைக்குயிலைத்  தழீஇ   நின்றார்  -   (தசரதனின்
மனைவியராகிய அம்மூன்று  தேவிமார்களும்) சங்கவளையல்களையணிந்த
 ஒரு  குயில் போன்ற  சானகியை (அன்புமிகத்)  தழுவி  மகிழ்ந்தார்கள்;
‘அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்  பெண்கள்   இனிப்பிறர்
யார்  உளர்?’   
-   அழகிய திருக்கண்களையுடைய (நம்) இராமனுக்கு
ஏற்ற துணைவியாகத் தக்கார். பெண்களில்  இவளைத்தவிர  (மூவுலகிலும்)
வேறு யார் உள்ளார்கள்?’;   என்று    கண்கள்  களிப்ப. மனங்கள்
களிப்பார்
- என்று  கூறி.  தங்கள்  கண்கள்   (இவளைக்கண்டதனால்)
களிப்படைய    (இவளை     மருகியாகப்     பெற்றதனால்)   மனமும்
களிப்படைந்தவர் ஆயினர்.   

மூவர்க்கும்.    கண் விருந்தும்  மனவிருந்தும்  படைத்தாள் பிராட்டி
என்பது  கருத்து.  குயில்  -  உவமையாகுபெயர்.  அங்கணன்  அழகிய
திருக்கண்களை    யுடையவனாகிய    இராமன்.    இராமனாகிய   நம்
செல்வனின்  திருக்கண்களுக்கு  நல்விருந்து   கிட்டியுள்ளது   என்பார்.
“அங்கணனுக்கு”  என்றார். கண்களின் களிப்பு!  மனத்துக்கு  இறங்கிற்று
என்பார்.  “கண்கள்  களிப்ப  மனங்கள்   களிப்பார்”  என்றார்.  தாயர்
மூவர்  மனநிலையும்  ஒன்றாகவே இருந்ததால். மூவர்  கூற்றையும்  ஒரு
கூற்றாகவே   உரைத்தார்.   தாயர்மூவரின்    பேதமிலாப்  பெருநிலை
சுட்டியவாறு.                                               96

                                 தேவியர் சீதைக்குப் பரிசளித்தல்
  

1256.‘எண் இல கோடி பொன். எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம். மங்கையர் வெள்ளம்.
கண் அகல் நாடு. உயர் காசொடு தூசும்.
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக!’ என்றார்.

 

‘எண்    இல கோடி  பொன்-  (மேலும் அத்தேவியர்  மூவரும்)
‘அளவற்ற  கோடிப்பொற்  காசுகளையும்; எல்லை இல் கோடி வண்ண
அருங்கலம்   
-   அளவற்ற   கோடியான  அழகிய   கிடைத்தற்கரிய
அணிகலங்களையும்;     மங்கையர்     வெள்ளம்-பணிப்பெண்களின்
பெருந்திரளினையும்;   கண்அகல்   நாடொடு   -  இடமகன்ற  (சில)
நாடுகளையும்;  காசு உயர் தூசும் - விலையுயர்ந்த  பட்டாடைகளையும்;
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக’ என்றார்
-பெண்களுக்குத்
தெய்வம்போலச்       சிறந்தசானகி        பெறுவாளாக’      என்று
கூறிக்கொடுத்தனர்.                                          97

                         இராமன் பிராட்டியோடு பள்ளி அடைதல்.
  

1257.நூற் கடல் அன்னவர் சொற் கடன்நோக்கி.
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்.
கால் கடல்போல் கருணைக்கடல்; பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஒர் பள்ளி அணைந்தான்.