தயரதனும். இராமன் முதலிய அரசிளங் குமரர்களும். தேவியரும். உடன் வந்து படை வீரர்களுடன் மிதிலையிலிருந்து. அயோத்தி மாநகரம் புறப்படுகின்றனர். வழியில் தீ நிமித்தங்களும் நன்னிமித்தங்களும் சேர்ந்து தோன்றுகின்றன. நிமித்திகள். “இன்றே வரும் இடையூறு: அது நான்றாய் விடும்” என்கிறான். அப்போது. தன் தந்தையைக் கொன்ற மன்னர் குலத்தை. இருபத்தொரு தலைமுறை கருவறுப்பேன் என்று சபதம் இட்டுள்ள பரசுராமன் பெருஞ்சினத்தோடு எதிர் நிற்கிறான். அபயம் வேண்டுகிறான் தசரதன். “முன்பே முறிந்துபோன சிவதனுசை ஒடித்த வீரம் என்ன வீரம்? இதனை வளை; உன் வீரம் உணர்வேன்’’ எனவுரைத்து வில்லின் வரலாறு உரைக்கிறான் பரசுராமன். மிக எளிதாக. இராமன் அவ்வில்லை வளைத்து. வில்லின் கணைக்கு இலக்குக் கேட்க. தான் ஈட்டிய தவத்தையெல்லாம் எடுத்துக் கொள்க என்கிறான் அவன். தவம் அனைத்தும் இழந்த பரசுராமன். நீ துளவ மாலையணிந்த திருமாலே என உணர்ந்தேன் என்று கூறி விடை பெறுகிறான். தயரதன். இராமன் பெருமையினை யுணர்ந்து. உச்சி மோந்து. ஆனந்தக் கண்ணீர் அருவியாட்டுகிறான். வருணனிடம். பரசுராமன் வில்லை வைத்திருக்கப் பணித்த இராமன் பரிவாரங்களுடன் அயோத்தி எய்துகிறான். கேகய மன்னன் ஓலைப்படி. மாமன் உதாசித்தோடு பரத சத்துருக்கனர் கேகய நாட்டினை ஏழு நாள்களில் சென்றடைகின்றனர். இனிமேல் நிகழ்வன அயோத்தியா காண்டம் ஆகும். |