பக்கம் எண் :

806பால காண்டம்  

இடையூறு     ஒன்று  இப்பொழுதே  வரும்;  அது  நன்றாய்  விடும்
என்றான்   
-   (வந்த  விரைவிலேயே)  அவ்விடையூறு   நன்றாகவும்
முடிந்துவிடும் என்று கூறினான்.  

நிமித்தம்  - காரணம். சகுனத்தின் காரணங்களை  அறிந்து கூறுவான்
நிமித்திகன்   ஆதலின்.  அவனை  “நெறியுணர்வான்    நினைவாளன்”
என்றார்.  அழையா  -  செய்யா  என்னும்  வினை   எச்சம்.    காகம்
முதலியன  இடம் ஆதலின். இடையூறு வரும் என்றும்.  மயில்  முதலிய
வலம்  ஆதலின்  அது   நன்மையாய்  முடியும்   என்றும்  நிமித்திகன்
கூறினான்.                                                  6

                        பரசுராமனது வருகையும். தசரதன் சோர்வும்
  

1269.என்னும் அளவினில். வானகம்
   இருள் கீறிட. ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய
   சடையான்; மழு உடையான்;
பொன்னின் மலை வருகின்றது
   போல்வான்; அனல் கால்வான்;
உன்னும் தழல்விழியான்; உரும்
   அதிர்கின்றது ஒர் மொழியான்;
 

என்னும்     அளவினில்- என்று (நிமித்திகன்) சொல்லி முடிக்கும்
போதிலே; வான் அகம் இருள் கீறிட - ஆகாயத்தில் பொருந்தியிருந்த
இருள்  சிதைந்து  ஒழிந்து;  ஒளிஆய்  மின்னும்படி  -  ஒளி செய்து
விளங்கும்படி;   புடை  வீசிய  -  பக்கங்களில்  எல்லாம்   பரவுமாறு;
சடையான்  
-  சடையினை யுடையவனும்; மழுவுடையான் -  கோடரிப்
படையையுடையவனும்;  பொன்னின் மலை வருகின்றது போல்வான் -
பொன்  மயமான  மேரு  மலை  நடந்து வருவது  போல்  வருபவனும்;
அனல்  கால்வான்
- மூச்சில் நெருப்புச் சிந்துபவனும்; உன்னும் தழல்
விழியான்   
-   (யாரிடம்   இத்துணை   வெகுளியென்று   காண்பார்)
நினைக்குமாறு    தழல்   சிந்தும்    விழிகளையுடையவனும்;    உரும்
அதிர்கின்றது   ஒர்   மொழியான்  
-  இடியும்  அஞ்சி   நடுங்கும்
தன்மையுடையன் கூடிய ஒப்பற்ற சொற்களையுடையவனும்.  

இவை     யனைத்தும் பரசுராமனுக்கு அடைமொழிகள்.   “என்னும்
அளவினில்”   எனும்   இத்  தொடர்  மேல்  வரும்   “மழுவாளவன்
வந்தான்”   (கம்ப.   1277)   என்பதோடு   முடியும்.     “சடையான்”
என்பதனால்  முனிவன் என்பதையும் “மழுஉடை யான்”   என்பதனால்
அம்  முனிவன்  பரசுராமன்  என்பதனையும்  முதலிலேயே   தோன்ற
வைத்த  திறம்  காண்க.  மழு  -  பரசு. “சடையான்   மழுஉடையான்”
என்பதனில்  உள்ள  சொல்  இன்பம் நினைக்க இனிப்பது.   நடவாதது
மலை;  இவனோ  நடக்கும் பொன்மலை என்பார்.  “பொன்னின் மலை
வருகின்றது  போல்வான்”  என்றார்.  இல்பொருள்   உவமை.  அனல்
மூச்சும். தழல் விழி