பக்கம் எண் :

  பரசுராமப் படலம்807

யும்     இடி  மொழியும்  அவன்   கொண்டுள்ள வெகுளியின்  அளவு
காட்டின.  இனிப்  பரசுராமனின்  வண்ணனையாக  வரும்  பாடல்களின்
சந்தம்.   வெகுளிப்   பொருளுக்கேற்ற    சந்தமும்    மிடுக்கும்  என
அமைந்துள்ளன.  

(இது முதல் ஒன்பது கவிகள் பரசுராமனின் வருணனை)           7
  

1270.கம்பித்து. அலை எறி நீர் உறு
   கலம் ஒத்து. உலகு உலைய.
தம்பித்து. உயர் திசை யானைகள்
   தளர. கடல் சலியா
வெம்பித் திரிதர. வானவர்
   வெருவுற்று இரிதர. ஓர்
செம் பொன் சிலை தெறியா. அயில்
   முக வாளிகள் தெரிவான்;
 

அலை  எறி  நீர்  உறு  கலம் ஒத்து- அலைகளை வீசும் கடல்
நீரிடையே  சிக்குண்ட மரக்கலம் போன்று; உலகு கம்பித்து உலைய -
உலகமும் உயிர்களும் நடுங்கி நிலைகுலையவும்; தம்பித்து உயர்  திசை
யானைகள்   தளர   
-   தூண்களைப்   போல்   அசைவற்று  (என்
செய்வதென்று   தெரியாமல்)    சிறந்த    எட்டுத்   திசையானைகளும்
தளர்ச்சியடையவும்;  கடல்  சலியா வெம்பித்திரிதர - கடல் பொங்கிக்
கொதித்து  நிலை வேறுபாடடையவும்;  வானவர் வெருவுற்று இரிதர -
மேல்  உலகத்துள்ள  தேவர்களும்  அஞ்சி  இடம்விட்டு  ஓடவும்;  ஓர்
செம்பொன்  சிலை  தெறியா  
-  செம்பொன்  மயமானதொருவில்லை
நாண்  ஏற்றித்  தெறித்து; அயில்முக  வாளிகள்  தெரிவான் - கூரிய
நுனியுடைய அம்புகளை ஆராய்ந்து எடுப்பவனும்.  

பரசுராமனின்     சினம்  அளக்க  இயலாத  கொந்தளிக்கும்  கடல்
போன்றது  என்றும். அச்  சினத்திடைப்பட்ட  உலகும்  உயிரினங்களும்.
கொந்தளிக்கும்  கடலிடைப்பட்ட  மரக்கலமும்.   அதன்   உள் சிக்கிய
பொருள்களும்  போன்றன  என்பார்.  “அலை  எறிநீர்   உறும்  கலம்
ஒத்து.  உலகு  கம்பித்து உலைய” என்றார்.  உலகம்  நிலைகுலையாமல்
தாங்கி   நிற்பவை  திக்குயானைகள்;  அவையும்   இவன்   சினத்தால்
செய்வதறியாது.  தம்பித்துத்  தளர்ந்தனவாம்;  “தம்பித்து  உயர்  திசை
யானகைள் தளர”  என்றார்.  தம்பம் - ண்.  தம்பித்தல்-  தூண்  என
நிற்றல்.  சலியா.  தெறியா என்பன செய்யா  எனும்  வினை  எச்சங்கள்.
திசையானைகளே  திசை தெரியாமல் திக் பிரமை  கொண்டன  என்றும்
பொருள்   கொளலாம்.   வானவர்   அஞ்சி    ஓடினர்   என்பதனால்.
பரசுராமன்   வானவரிலும்   மிக்க  தவவலிமை   பெற்றவன்   என்பது
தெளிவாம்.  வில்லாளர்.  நாண்  இறுகியுள்ளதா  என  அறிய  வில்லின்
நாணைக்  கைவிரல்களால்  தெறித்துப்  பார்ப்பர்.   அவ்   வொலியால்
இவ்வளவு நிலைப்பிறழ்?வுகள் நிகழ்ந்தன எனினுமாம்.               8
 

1271.‘விண் கீழுற என்றோ? படி
   மேல்கீழ் உற என்றோ?